கடலூர் : சிதம்பரம் தில்லை நகர் பகுதியில் ஆயுதப்படை காவலர் பெரியசாமி (26) என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் உள்ள தனியார் பள்ளியில் அரசு பொதுத்தேர்வு வளாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் பெரியசாமி என்பவர் இன்று அதிகாலை தனது துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் கடந்த மே 6-ஆம் தேதி முதல் முதல் இப்பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இவரது தந்தை பெயர் முனுசாமி சொந்த ஊர் சிதம்பரம் அருகே சேந்தரகிள்ளையில் உள்ள மணிகொல்லை தெருவைச் சேர்ந்தவர். அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சம்பவ இடத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் சிதம்பரம் டிஎஸ் பி எஸ்.ரமேஷ் ராஜ் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Suicidal Trigger Warning
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில்தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060).
மேலும் படிக்க : Watch Video : பார்வை கற்பூர தீபமா..! நாதஸ்வரத்திலே வாசித்து அசத்திய கிராமிய கலைஞர்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்