பைக்கை எடுத்த தம்பி... கண்டித்த அண்ணன்... தூங்கும் போது உயிரோடு எரித்து கொன்ற தம்பி!

ஆத்திரமடைந்த ராஜசேகர், என்னிடம் சொல்லாமல் நீ எப்படி எனது வாகனத்தை எடுத்து சென்றாய் என புருசோத்தமனை கண்டித்துள்ளார். அது மோதலில் முடிந்து பின்னர் இருவரும் அமைதியாக சென்றுள்ளனர்.

Continues below advertisement

திருவண்ணாமலை மாவட்டத்தில்  ஆரணி தாலுக்கா விளைசித்தேரி கிராமத்தை சார்ந்தவர் வெள்ளை. இவரது மகன்கள் ரமேஷ், புருஷோத்தமன் மற்றும் ராஜசேகர். புருசோத்தமன் சொந்தமாக நெசவுத்தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி இருக்கும் நிலையில், கடந்த 6 வருடங்களுக்கு முன்னதாக இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து தனித்தனியே நேசித்து வருகின்றனர்கள்.

Continues below advertisement

ராஜசேகர் மற்றும் ரமேஷ் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இவர்களுக்கு குடும்பத்தின் பூர்வீக சொத்தாக வீடு மட்டும் உள்ளது. இதனால் வெள்ளை தனது 3 மகன்களுக்கும் சொத்தை பிரித்து கொடுத்துள்ளார். புருசோத்தமனுக்கு சொத்தில் பங்காக ரூ. 7லட்சம்  கொடுப்பதாக கூறியுள்ளார், அதில் முதல் தவணையாக ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார். மீதமுள்ள தொகையை வழங்காமல் ராஜசேகர் காலம்தாழ்த்தி வந்த நிலையில், இதனை கேட்ட புருசோத்தமன்  இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு மோதலும் நடந்துள்ளது.

 


 

அதனைத்தொடர்ந்து , சம்பவத்தன்று புருசோத்தமன், ராஜசேகரனின் இருசக்கர வாகனத்தை எடுத்து ஓட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர், என்னிடம் சொல்லாமல் நீ எப்படி எனது வாகனத்தை எடுத்து சென்றாய் என புருசோத்தமனிடம் தகராறு ஏற்படவே, அது மோதலில் முடிந்து பின்னர் இருவரும் அமைதியாக சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று  மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆத்திரமடைந்த ராஜசேகர் வீட்டில் உள்ள மாடியில் புருசோத்தமன் உறங்கிக்கொண்டு இருக்கையில், பெட்ரோல் ஊற்றி அவரை உயிருடன் எரித்தார். தீயில் கருகி அலறல் சத்தததுடன் கதறிய புருசோத்தமன், மாடியில் இருந்து கீழே தவறி விழுந்து உயிருக்கு போராடியுள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார், சிகிச்சையில் இருந்த புருசோத்தமன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

 


 

மன்னிப்பு கேக்குறவர விடமாட்டேன்.. அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி | Annamalai | Senthil Balaji

இச்சம்பவம் குறித்து ஆரணி கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து தூங்கி கொண்டிருந்த அண்ணன் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த தம்பியை கைது செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னியில் ஆஜர்படுத்தி போளுர் கிளை சிறையில் அடைத்தனர். சொத்து பிரச்சனையில் தம்பி அண்ணனை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எலும்பும் தோலுமான படங்கள்; ஐஐடி மெட்ராஸில் உணவு தரப்படாமல் நாய்கள் சித்ரவதை செய்யப்படுகிறதா?

Continues below advertisement