முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்ததால் 17 நாட்களில் உண்டியல்கள் நிரம்பியது. இதையடுத்து திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை என இரண்டு நாட்கள் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- கமிஷன் கிடைப்பதால் பொங்கல் பரிசு பொருட்கள் வடமாநிலத்தில் இருந்து இறக்குமதி - ஈபிஎஸ் குற்றச்சாட்டு
திங்கள் கிழமை அன்று எண்ணப்பட்ட காணிக்கையின் போது 2 கோடி வரவு கிடைத்தது. மீண்டும் மறுநாள் எண்ணிக்கையாக மொத்த காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் 4 கோடியே 33 இலட்சத்து 56 ஆயிரத்து 610 கிடைத்துள்ளது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வீடு, தொட்டில், வேல், கொலுசு, போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- சேவல் சண்டை போட்டிகள் நடத்துவது குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - நீதிபதிகள் கேள்வி
தங்கம் 1,121 கிராமும், வெள்ளி 17 ஆயிரத்து 736 கிராமும் கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு ரூபாய் நோட்டுக்களாக 192 கரன்சிகளும் கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணிக்கையில் திருக்கோயில் கல்லூரி பணியாளர்கள், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர் நடராஜன், மதுரை அறநிலையத்துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் பொன் சுவாமிநாதன், திண்டுக்கல் மண்டல உதவி ஆணையர் அனிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாளை மறுநாள் முதல் 18ஆம் தேதிவரை பழனி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வர திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. தைப்பூசத்திருநாள் நிகழ்வுகளை யூடியூப் வழியாக காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்