பிரபல தனியார் மருத்துவமனைக்குள், நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு

மதுரையில் பிரபல தனியார் மருத்துவமனைக்குள், நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continues below advertisement
மூதாட்டி அணிந்திருந்த தங்க நகை காணாமல்போன நிலையில் நகையை திருடுவதற்காக மூதாட்டியை முகத்தை மூடி கொலை செய்தனரா? அல்லது வேறு எதும் காரணமா? என்ற அடிப்படையிலும் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
 
பிரபல தனியார் மருத்துவமனை
 
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. 6 தளங்களை கொண்டுள்ள இந்த மருத்துவமனையில் தினமும் இங்கு ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். மதுரை மட்டுமின்றி சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் என தென்மாவட்டத்தைச் சேர்ந்த பலரும் வருகை தந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு பல்வேறு வகையான சிறப்பு சிகிச்சையும், அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் பிரதான பகுதியில் உள்ள இந்த தனியார் மருத்துவமனையில், மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
நகையை திருடுவதற்காக மூதாட்டி கொலை?
 
மருத்துவமனையில் உள்ள உணவகங்களிலும் ஏராளமான பணியாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.  இந்நிலையில் நேற்றிரவு மருத்துவமனை உணவகத்தில் பணிபுரியும் 70- வயது மதிக்கதக்க முதாட்டியான முத்துலெட்சுமி என்பவர் 6-வது தளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக மாட்டுத்தாவணி காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
 
தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மூதாட்டி அணிந்திருந்த தங்க நகை காணாமல் போன நிலையில் நகையை திருடுவதற்காக மூதாட்டியை முகத்தை மூடி கொலை செய்தனரா? வேறு எதும் காரணமா? என்ற அடிப்படையிலும் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். மதுரையில் பிரதான பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola