அம்பத்தூர் ஒரகடம் ஆயிரத்தம்மன் நகர் பெரியார் குறுக்கு தெருவை சேர்ந்தவர் 41 வயதான கிருஷ்ணகுமார். இவர்  திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல்பிரிவில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கிருஷ்ணகுமாருக்கும், ராஜமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் எஸ்.ஐ.க்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் கிருஷ்ணகுமார், முகப்பேரில் வசிக்கும் பெண் எஸ்.ஐ வீட்டுக்கு காரில் சென்று ஏதோ ஒரு காரணத்திற்காக போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.


தகவலறிந்து வந்த நொளம்பூர் போலீசார், கிருஷ்ணகுமார் மீது வழக்குப்பதிவு செய்து காரையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், நேற்று மாலை கிருஷ்ண குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர், ‘எனது சாவுக்கு பெண் எஸ்.ஐ தான் காரணம்,' என செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட் டுள்ளார். இதுகுறித்து கொரட்டூர் போலீசார் தற்போது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


முன்னதாக, போலீஸ் ஏட்டு கிருஷ்ணகுமார் கடந்த செப்டம்பர் மாதம் தனது பக்கத்து வீட்டினரிடம் போதையில் தகராறு செய்து அருவருக்கத்தக்க முறையில் நடந்து கொண்டதும், இதனால், அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண