மது போதையில் நிர்வணமாக அடுத்தவரின் வீட்டிற்குள் சென்ற நீலகிரி தொகுதி அதிமுக முன்னாள் மக்களவை உறுப்பினர் கோபால கிருஷ்ணன் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கடந்த அதிமுக ஆட்சியில் நீலகிரி தொகுதி மக்களவை தொகுதி மக்களவை உறுப்பினராக கோபால கிருஷ்ணன் இருந்தார்.  இவர் நகராட்சி தலைவராகவும் இருந்துள்ளார்.  தற்போது அதிமுக மாவட்ட அவைத் தலைவராக உள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  அதிமுக முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் மது போதையில் முத்தாலம்மன் பேட்டை பகுதியில் உள்ள கோபி என்பவரின் வீட்டிற்குள் முழு நிர்வணமாக புகுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அந்த வீட்டின் உரிமையாளர் கோபி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பெண்கள் உள்ள இடத்தில் முழு நிர்வணமாக வந்தது குறித்து கோபி எதிர்ப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முன்னாள் எம்பி கோபால கிருஷ்ணனை கோபி சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர் நிர்வாணமாக இருப்பதை அவர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். இது குறித்து உடனடியாக குன்னூர் நகர் காவல் நிலையத்தில் இரண்டு தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது.  


தலையில் கல்லைப்போட்டு இளைஞரை கொன்ற திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் உட்பட 3 பேர் கைது




விழுப்புரம்: சப் இன்ஸ்பெக்டர் மீது பட்டாசு வீசி கொலை செய்ய முயன்றதாக 4 பேர் கைது


முன்னாள் அதிமுக மக்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் தன்னை தாக்கியதாக கூறி குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து இருவரிடமும் விசாரணை நடத்திய காவல் துறையினர் வீட்டிற்குள் குடி போதையில் தகாத வார்த்தை பேசிய முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல கோபால கிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்திய வீட்டின் உரிமையாளர் கோபி மீதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே அதிமுக முன்னாள் மக்களவை உறுப்பினர் கோபால கிருஷ்ணன் நிர்வணமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகளை கோபி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதிமுக முன்னாள் எம்பி கோபால கிருஷ்ணன் மது போதையில் நிர்வணமாக அடுத்தவரின் வீட்டிற்குள் இருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண