கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது, திமுகவை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து அவர்களின் கார் கண்ணாடி உடைத்தும் அவர்களை தாக்கிய வழக்கில் 15 பேர் கைது செய்யப்பட்டனர். கரூர் கீழமை நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, வருமானவரித்துறை அதிகாரிகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தனர். மதுரை உயர்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கை விசாரித்தது, கரூர் கிழமை நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்து சம்பந்தப்பட்ட 15 பேரும் 3 நாட்களுக்குள் கரூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கை கரூரில் நீதிமன்றம் விசாரணை செய்து தீர்ப்பு வழங்கலாம் என உத்தரவிட்டிருந்தது. 


 




 


கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கம் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.  திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் மணிராஜ், நெடுஞ்செழியன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுந்தரவேல் ஆகியோர் வாதாடினர். வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பாக சென்னையில் இருந்து வந்திருந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.பி. சீனிவாஸ் ஆகியோர் சுமார் 2 மணிநேரம் காரசாரமான விவாதங்களை முன் வைத்து வாதாடினர். இரு தரப்பு வாதங்களை கேட்டு அறிந்த நீதிபதி ராஜலிங்கம்,  தீர்ப்பு வழங்குவதாக உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து நீதிமன்றத்தில் சரண் அடைந்த 15 நபர்களும் நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 


 




 


 


அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், நண்பர்கள், ஆதரவாளர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் வீட்டில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி வருமானவரி துறையினர் சோதனை செய்த போது சோதனை செய்ய விடாமல் தடுத்து தாக்கி, அதிகாரிகளின் வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் இருவர் உட்பட திமுகவை சேர்ந்ந 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள சிறையில் உள்ளனர். கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் ஜாமீன் மனுவை தள்ளுபடி  செய்து  மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.