இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில், புதிய S1X மின்சார ஸ்கூட்டரை ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

Continues below advertisement

ஓலா நிறுவனம்:

அதிகரித்து வரும் தேவைகளின் அடிப்படையில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், மின்சார வாகனங்களின் அறிமுகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் ஓலா நிறுவனம் தவிர்க்க முடியாததாக உள்ளது. அண்மையில் தான் வெறும் ரூ.1.10 லட்சம் மதிப்பில் S1 ஏர் எனும் மின்சார ஸ்கூட்டர் மாடலை அறிமுகப்படுத்தியது. அந்த நிறுவனத்தின் சார்பில் இந்திய சந்தையில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சார ஸ்கூட்டர் எனும் பெருமையுடன் அந்த வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தான், S1 ஏர் மாடலை காட்டிலும் மிகக் குறைந்த விலையில் புதிய மின்சார ஸ்கூட்டரை அறிமுகபடுத்த ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Continues below advertisement

S1X மின்சார ஸ்கூட்டர்:

தங்கள் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் மாடலாக S1X எனும் மின்சார ஸ்கூட்டரை ஓலா நிறுவனம் வடிவமைத்து வருகிறது. சுதந்திர தினத்தை ஒட்டி ஆகஸ்ட் 15ம் தேதி இந்த புதிய வாகனம் அறிமுகப்படுத்த உள்ளது.ஏற்கனவே,  மற்ற போட்டி நிறுவனங்களின் அனைத்து எண்ட்ரி லெவல் வாகனங்களை காட்டிலும், குறைவான விலையிலேயே ஓலா நிறுவனம் தனது எண்ட்ரி லெவல் வாகனத்த விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் அதில் மேலும் ஒரு புதிய மைல்கல்லாக தான் ஒரு லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில், S1X மின்சார ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கடந்த ஜுன் மாதத்தில் 17 ஆயிரத்து 579 யூனிட்களை விற்று, தொடர்ந்து நாட்டின் முன்னணி மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியாளராக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பு விவரங்கள்:

S1X தயாரிப்பு தொடர்பான எந்த விவரமும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேநேரம், இந்திய சந்தையில் 125சிசி ஸ்கூட்டர்களின் விலை தான் சுமார் ஒரு லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால், S1X மின்சார ஸ்கூட்டரும் அதே ரேஞ்சில் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுக நிகழ்ச்சியின் போது ஓலா நிறுவனம் வெளியிட்ட புகைப்படத்தை காணும்போது, அது லேசானதாகவும், காஸ்ட் கட்டிங்கிறாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதும் தெளிவாக தெரிகிறது. 

ரேஞ்ச் என்னவாக இருக்கும்?

ஓலா S1X மின்சார ஸ்கூட்டரின் ரேஞ்ச் என்பது முக்கியத்துவமானதாக கருதப்படுகிறது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் தூரம் வரையில் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் வெளியான S1 மாடல் 125 கிலோ மீட்டர் தூரம் வரையிலான ரேஞ்சை வழங்குவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ஓலா நிறுவனத்தின் S1 ப்ரோ மாடல் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 181 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் தருவது குறிப்பிடத்தக்கது. இதனால், புதிய மின்சார ஸ்கூட்டர்கள் மூலம், பெட்ரோல் ஸ்கூட்டர்கள் விற்பனையை முந்துவோம் என ஓலா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI