நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை: நண்பர் பவீந்தர் சிங் கைது!- பின்னணி என்ன?

Amala Paul: நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அவரது நண்பர் பவீந்தர் சிங் கைது!

Continues below advertisement

நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அவரது நண்பர் பவீந்தர் சிங் விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலா பால் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குநர் பா. விஜய்யை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்று விஜய்யும் - அமலாபாலும் பிரிந்தனர். பின்னர் அமலாபாலுக்கு கடந்த 2018ம் ஆண்டு திரைப்படத் தொழிலில் பஞ்சாப்பினை சேர்ந்த பவ்நிந்தர் சிங் தத் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இதையடுத்து அமலாபால் மற்றும் பவ்நிந்தர் சிங் தத் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து (6T) பூவி திரைப்பட நிறுவனத்தினை விழுப்புரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோட்டக்குப்பம் அருகே உள்ள பெரிய முதலியார்சாவடியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி தொழில் செய்து வந்துள்ளனர்.

Continues below advertisement

அப்போது அமலாபாலை திருமணம் செய்து கொள்வதாக பவ்நிந்தர் சிங் தத் கூறி பலமுறை அமலாபாலுடன் ஒன்றாக இருந்து விட்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். அதன் பின்னர் நடிகை அமலாபாலிடம் பவ்நிந்தர் சிங் தத் ஒன்றாக இருந்த புகைப்படத்தினை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக கூறி மிரட்டல் விடுத்தாகவும், பண மோசடி செய்ததாகவும், பொருளாதார ரீதியாகவும்,தொழில் ரீதியாக துன்புறுத்தல் செய்ததாக அமலா பால் தரப்பில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசில் கடந்த 26 ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் 16 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து முதலியார் சாவடியில் இருந்த பவ்நிந்தர் சிங் தத் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola