Vinayagar Chaturthi Songs in Tamil: நாளை முதல் இந்தியா முழுவதும் பிள்ளையார் சதுர்த்தி அதாவது விநாயகர் சதுர்த்தி களைக்கட்டவுள்ளது. நீங்களும் கொளுக்கட்டை செய்வது முதல் பிள்ளையார் சிலைகள் வாங்குவது வரையில் அனைத்திலிம் மும்முரமாக இருப்பீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்! என்னதான் அனைத்தயும் ஈடுபாட்டுடன் செய்தாலும் , வீடு முழுவதும் ஒலிக்கு விநாயகர் பாடல் இல்லாமல் , எப்படி  அந்த நாள் பூர்த்தி அடையும் . உங்களுக்காக சிறந்த கணபதி பக்தி பாடல்களை கீழே தொகுத்துள்ளோம்.. மகிழ்ச்சியும் வளமும் பெறுக வாழ்த்துக்கள் !






விநாயகனே வினை தீர்ப்பவனே :


இந்த பாடல் இல்லாத திருவிழாக்களை பார்க்க முடியுமா ! முதற்கடவுள் என அறியப்படும் விநாயகருக்கு பல கோவில்களில் முதலில்  ஒலிக்க செய்யும் பாடல் இதுதான் . இதனை சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடியிருப்பார்.



 


ஒன்பது கோளும் ஒன்றாய் காண :


இந்த பாடலை டி.எல்.மஹாராஜன் என்பவர் பாடியிருக்கிறார். பாடல்கள் துவங்கும்  பொழுதே அதன் பின்னணி இசை உங்களுக்கு மன அமைதியையும் ஆறுதலையும் நிச்சயம் தரும் .


 



 


பொம்ம பொம்மைதா , தைய்ய தையதா :


இந்த பாடலை பிரபல ஏ.ஆர் ரமணியம்மாள் என்பவர் பாடல் , இந்த பாடலுக்கான வரிகளை எம்.என்.சுப்பிரமணியன் எழுத , இசையமைத்திருந்தார் டி.கே.ராமமூர்த்தி


 



 


ஆவணி வந்தது புண்ணிய சதுர்த்தி நாளும் பிறந்தது


 இந்த பாடலை வீரமணிதாசன் என்னும் பக்தி பாடகர் பாடியிருக்கிறார். ஃபாஸ்ட் பீட்டில் செல்லும் இந்த பாடலின் இடையில் கணபதி மந்திரங்கள் மற்றும் பிள்ளையாரின் அவதாரங்களும் அவற்றின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். உங்கள் பக்திக்கு உகந்த பாட்டாக இது இருக்கும் என நம்புகின்றோம்.


 



 


கணபதியே வருவாய் ! அருள்வாய் !


இந்த பாடல் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் ஒலிக்கும் மற்றுமொரு அழகிய மற்றும் ஆழமான பக்தி பாடல் . இதுவும் உங்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை நிறைவாக்கும் என நம்புகின்றோம்


 



Also Read | Vinayagar Chaturthi 2022 : விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் ரெடி! ஸ்டேட்டஸ நிரப்ப தயாராகுங்க!