கேரள மாநிலம் கொல்லம் அருகே சடயமங்கலம் பகுதியில் பண்ணையில் இருக்கும் பசுவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
சடயமங்கலம் பகுதியில் இரவு நேரத்தில் பண்ணையில் இருக்கும் பசுவிற்கு மணி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததன் காரணமாக கைது செய்யப்பட்டார். பசு வழகத்திற்கு மாறாக சத்தமிடுவதை கவனித்த உரிமையாளர் அங்கு சென்றுள்ளார்.
அப்போது உரிமையாளர் வருவதை அறிந்து மர்ம நபர் சுவர் ஏறி குதித்து சென்றார். பின் அவர் காவல் துறையிடம் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, சுவரில் மணி என்பவர் ஏறி குதித்து ஓடியது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, மணியை கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் பசுவுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. மணி இது போன்று வேறு ஏதாவது விலங்குகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விலங்குகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதை ஆங்கிலத்தில் பீஸ்டியாலிடி (Beastiality) என்று கூறுகின்றனர். மிருகத்துடன் புணர்ச்சி என்பது மிகவும் கொடூரமான நடத்தையாக கருதப்படுகிறது.
தேசிய பயோடெக்னாலஜி தகவல் மையத்தின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆராய்ச்சியின்படி, பீஸ்டியாலிடி (Beastiality) என்பதும் ஒருவிதமான பாலியல் வன்கொடுமையே. பாலியல் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக விலங்குகளை பயன்படுத்துவது பாலியல் வன்முறை என்று கூறப்பட்டுள்ளது.
மிருகங்களை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவைத் தவிர, நெதர்லாந்து, பிரான்ஸ், டென்மார்க், சுவிட்சர்லாந்து போன்ற பல ஐரோப்பிய நாடுகளிலும் விலங்குகளுடன் பாலியல் உறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.
இதைத் தவிர, ஜெர்மனியிலும் விலங்குகளுடன் பாலியல் உறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில், இந்தக் குற்றத்திற்கான தண்டனையில் 2003 ஆம் ஆண்டில் மாற்றங்கள் செய்யப்பட்டது.
இந்தியாவில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.