தமிழ்நாடு:



  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து 16,932 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

  • அதிமுக கட்சித் தலைமை குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 

  • டெல்லியில் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம் பெறும் - கடந்தாண்டு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு தேர்வு   

  • மருந்து கடைகளில் தீவிர சோதனை நடத்திட வேண்டும், மருந்துப் பொருட்கள் போதைப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டு வருவதால், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பது குறித்த ஆலோசனைக்குப்பிறகு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

  • வரும் மக்களவை தேர்தலில் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் போட்டியிடும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவர் நாராயணசாமி அறிவிப்பு 

  • அனைத்து மாணவர்களுக்கும் வகுப்பினை தொடங்க கனியாமூர் பள்ளி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை - பள்ளிக்கு திரும்பும் மாணவர்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்துவது குறித்து நீதிபதிகள் கேள்வி 

  • திடீரென பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் சேலத்தில் நேற்று 3வது நாளாக போராட்டம் - மீண்டும் பணி வழங்க கோரிக்கை 

  • பெண் காவலரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக சொல்லப்பட்ட இருவரையும் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கிய சில மணி நேரங்களிலேயே கைது செய்த காவல்துறை

  • முதுமலையில் ஒரு வாரத்தில் 15 காட்டுப்பன்றிகள் உயிரிழப்பு - ஆப்ரிக்க பன்றி காய்ச்சல் காரணமாக என வனத்துறை அதிகாரிகள் விசாரணை 

  • சென்னை கலங்கரை விளக்கம் முதல் பெசன்ட் நகர் இடையே 4.6 கிமீ நீளத்திற்கு ரோப் கார் சேவை அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடக்கம் 


இந்தியா: 



  • தியேட்டர்களில் கட்டணமில்லா இலவச குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு - குழந்தைகளுக்கான உணவை எடுத்து செல்ல ஆட்சேபனை தெரிவிக்கக்கூடாது என அறிவுறுத்தல் 

  • அறிவியல் ஆராய்ச்சிகளில் பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும் - இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு 

  • நடப்பாண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஜனவரி 27 ஆம் தேது கலந்துரையாடுவார் என அறிவிப்பு 

  • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் குவிந்த கூட்டம் - ஒரே நாளில் ரூ.7.68 கோடி வசூல் 

  • மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுரிமைக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு 

  • பாரம்பரியாமான 8 ரயில்களை ஹைட்ரஜன் எரிபொருள் கொண்டு இயக்கிட இந்திய ரயில்வே துறை முடிவு. 


உலகம்:



  • தொடர் தாக்குதலால் உக்ரைனை சீர் குலைக்க முயல்கிறது ரஷ்யா; நாட்டைக்காக்க எதையும் செய்வோம் என உக்ரைன் அதிபர் திட்டவட்டம். 

  • தங்கள் நாட்டுக்கு வரும் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை என இங்கிலாந்து அறிவிப்பு

  • அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் முதல் பெண் கவர்னராக கேத்தி ஹோச்சுல் பதவியேற்றார்

  • உளவு வேலைகளுக்கு பாகிஸ்தானிய நடிகைகளை பயன்படுத்தியதாக  முன்னாள் ராணுவ அதிகாரி அடில் ராஜா அதிர்ச்சி தகவல்.

  • பாகிஸ்தானில் உள்ள சந்தைகளில் இரவு 8.30 மணிக்கு மேல் மின்சார பயன்பாட்டுக்குத் தடை. 

  • தங்கள் நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்படுவதா? - சீனா கடும் கண்டனம் 


விளையாட்டு: 



  • இலங்கைக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் 2 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றியைப் பெற்றுள்ளது. 

  • இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா மீண்டும் தேர்வாக வாய்ப்பு இருப்பதாக தகவல் 

  • ரஞ்சிக்கோப்பை தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் ஹாட்ரிக் உள்பட 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சவுராஷ்ட்ரா அணி கேப்டன் உனத்கட் சாதனை