கோவா மாநிலத்தில் பல்வேறு சுற்றுலா பயணிகள் கோடைக் கால விடுமுறைகளைக் கழிக்க கூடுவது வழக்கம். இந்நிலையில், சமீபத்தில் கோவாவின் பிரபலமான அஞ்சுனா கடற்கரைப் பகுதியில், டெல்லியைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் அதிவேகமாக தனது எஸ்.யு.வி மாடல் காரை ஓட்டியது சிசிடிவி கேமராக்களில் பதிவானதையடுத்து, அவர் மீது கோவா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காரை ஓட்டியவர் போதையில் இருந்திருக்கலாம் என போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.


கோவா காவல்துறையைச் சேர்ந்த துணை கண்காணிப்பாளர் ஜிவ்பா டால்வி இதுகுறித்து பேசிய போது டெல்லியின் மங்கள்புரி பகுதியைச் சேர்ந்த லலித் குமார் தயால் என்பவர் எஸ்.யு.வி ரக வாகனம் ஒன்றை கோவாவைச் சேர்ந்த ஒருவரிடம் வாடகைக்குப் பெற்று அஞ்சுனா கடற்கரையில் பிற சுற்றுலா பயணிகளையும், மக்களையும் அச்சுறுத்தும் விதமாக வாகனத்தை ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்துள்ளாதாகத் தெரிவித்துள்ளார். 


கோவா கடற்கரையில் கார் வேகமாக செல்வதும், பின்னர் மணலில் சிக்கிக் கொள்வதும் காட்டப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்த திமுக பிரமுகர்கள்..?;கணவன், மனைவி இருவரும் கைது..!


 







மேலும் பேசிய காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜிவ்பா டால்வி அஞ்சுனா காவல் நிலையத்தின் ஆய்வாளர் விக்ரம் நாயக் லலித் குமார் தயால் மீது 279, 336 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ், அதிவேகமாக வாகனத்தை செலுத்துதல், பிறரின் உயிருக்கு ஆபத்து விளைவித்தல் முதலான குற்றங்களுக்காக வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார். 


மேலும், வடக்கு கோவாவின் மாபுசா பகுதியைச் சேர்ந்த சங்கீதா கவடைக்கர் என்பவர் தனது தனியார் காரைக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு வாடகைக்கு அளித்ததால் அவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது கோவா காவல்துறை.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண