ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கை என்பது உடல்நலம், மன நலம் ஆகியவற்றோடு தொடர்புடையது. மேலும், நாம் உண்ணும் பல்வேறு உணவுகளுக்கும் நமது பாலியல் வாழ்க்கைக்கும் தொடர்புண்டு. சில உணவு வகைகளில் இருக்கும் சத்துகள் பாலியல் வேட்கையைத் தூண்டுவதுடன், ஒட்டுமொத்த உடல்நலனையும் மேம்படுத்துகிறது. பெரும்பாலான ஆரோக்கியமான உணவுகள் பாலியல் நலனை மேம்படுத்துபவை என்றாலும், சில உணவுகள் பாலியல் நாட்டத்தை அதிகரிப்பதற்காகவே இருக்கின்றன. இவற்றை டயட்டில் சேர்த்துக் கொள்ளும் போது, பாலியல் நலன் அதிகரிப்பதோடு, பாலியல் நாட்டம், உடலின் ஆற்றல், ரத்த ஓட்டம் முதலானவை அதிகரிக்கின்றன. 


பாலியல் வாழ்க்கையை மேம்படுத்தும் டாப் உணவு வகைகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்... 


1. டார்க் சாக்லேட்



டார்க் சாக்லேட்டில் இருக்கும் பல்வேறு ஆரோக்கியமான வேதிப் பொருள்கள் உடல்நலனை மேம்படுத்துகின்றன. அதில் இருக்கும் ஃபெனைலெத்லமைன் என்ற வேதிப் பொருள் காரணமாக பாலியல் நாட்டம் அதிகரிக்கிறது. 


2. பூசணி விதைகள்



பூசணி விதைகளில் இருக்கும் ஜிங்க் என்ற வேதிப் பொருள் காரணமாக, உடலில் பாலியல் தேவைகளுக்கான டெஸ்டொஸ்டீரான் ஹார்மோன் சுரப்பது கட்டுப்படுத்தப்படுகிறது. ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் டெஸ்டொஸ்டீரான் ஹார்மோன் சுரப்பது பாலியல் நாட்டத்தை அதிகரிக்கும். மேலும், இதில் இருக்கும் ஒமேகா 3 ஆசிட்கள், இரும்புச் அத்து, மெக்னீசியம் முதலான சத்துகள் காரணமாக கருவுறுதலுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. 


3. தர்பூசணி



கோடைக் காலத்தில் தாகம் தணிக்கும் தர்பூசணியைப் பாலியல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்தலாம். பாலியல் உறுப்புகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்குவதால், தர்பூசணி உண்பது பாலியல் நாட்டத்தை அதிகரிக்கிறது. மேலும், இதில் பொட்டாசீயம் இருப்பதால், ரத்த ஓட்டமும் சீராகிறது. 


4. வாழைப்பழம்



வாழைப்பழத்தில் வைட்டமின் பி, டெஸ்டொஸ்டீரானை உற்பத்தி செய்யும் வேதிப் பொருளான ப்ரோமெலின் முதலான சத்துகள் இருப்பதால் இது பாலியல் நாட்டத்தை அதிகரிக்கும் உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இதில் பொட்டாசீயம் இருப்பதால், பாலியல் உறவின் போது தசைப் பிடிப்பு ஏற்படாமல் தவிர்க்கிறது. 


5. ஸ்ட்ராபெர்ரி



சிறிய அளவிலான பழம் தான் என்றாலும், ஸ்ட்ராபெர்ரி பழங்களில் பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, ஜிங்க் முதலான வேதிப் பொருள்கள் இருப்பதோடு, இது ஆண்களிலும், பெண்களிலும் பாலியல் நாட்டத்தை அதிகரிக்கிறது. வைட்டமின் சி இருப்பதால், பாலியல் வேட்கை அதிகரிக்கிறது; ரத்த ஓட்டம் சீராகிறது. மேலும், மன அழுத்தத்தையும் குறைக்கிறது. ஸ்ட்ராபெர்ரி உண்பதால் உடலில் ஆக்சிடாசின் அதிகமாக வெளியேறுவதுடன், பாலியல் உச்சநிலை அதிகரிக்கிறது. 


6. பீட்ரூட்



பீட்ரூட்டில் கிடைக்கும் பொட்டாசீயம் காரணமாக, உடலில் பாலியல் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மேலும், இதில் இருக்கும் நைட்ரேட்களின் காரணமாக ஒட்டுமொத்த பாலியல் நலனும் மேம்படுகிறது. 


பாலியல் வாழ்க்கையை மேம்படுத்துவதில் வாழ்க்கை முறை, உணவு முறை முதலான பல்வேறு காரணிகள் இருக்கின்றன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை, உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொள்வது பாலியல் நலனை உறுதி செய்கிறது.