விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் காவல் துறையினருக்கு சவாலான கருதப்பட்ட வழக்கில் இரண்டு மாதங்களுக்கு பிறகு செல்போன் சிக்னல் மூலம் மூன்று குற்றவாளிகளை விக்கிரவாண்டி போலீசார் கைது செய்தனர்.


பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை:


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள சிந்தாமணி அரசு பள்ளியில் பணிரெண்டாம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவி மற்றும் மாணவன் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இந்நிலையில் பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி செங்கமேட்டிலுள்ள சிவன் கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு செங்கமேட்டு  ஏரிக்கரை பகுதியிலுள்ள முட்புதரில் இருவரும் தனிமமையில் சந்தித்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் காதலனான பள்ளி மாணவனை தாக்கிவிட்டு பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர்.


இச்சம்பவம் தொடர்பாக விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மூவர் குறித்து எந்த தடையங்களும் கிடைக்காததால் அப்பகுதியிலிருந்த செல்போன் டவர் மூலம் அங்கு பதிவாகியிருந்த 1800 செல்போன் எண்களை கொண்டு போலீசார் விசாரனை செய்தனர். அப்போதும் குற்றவாளிகளை பிடிப்பதில் போலீசாருக்கு பெரும்சவாலாகவே இருந்து வந்தது இந்நிலையில் பள்ளி மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு செல்போனை பிடுங்கி சென்ற இளைஞர்கள் இரண்டு தினங்களுக்கு முன் செல்போனை சுவிட்ச் ஆன் செய்துள்ளனர். அந்த செல்போனின் ஐ எம் இ நம்பர் மற்றும் சிக்னலை கொண்டு விக்கிரவாண்டி தனிப்படை போலீசார் குற்றாவாளிகளை பிடித்துள்ளனர்.


3 இளைஞர்கள்:


கோலியனூர் அருகேயுள்ள குச்சிப்பாளையம் கிராமத்தை சார்ந்த அபிஷேக், அபி, கவி ஆகிய மூவரும் இணைந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதும் இது போன்று கடந்த மூன்று வருடங்களாக ஏரிக்கரை பகுதியில் தனிமையில் ஒதுங்கும் காதலர்களை மிரட்டி பணம் பறிப்பது பாலியலில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தது விசாரனையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர்.


விழுப்புரம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்த நிலையில் பள்ளி மாணவியின் செல்போன் சிக்னல் மூலம் குற்றவாளிகள் மாட்டிக்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரையும் இவ்வழக்கில் போலீசார் ஏற்கனவே காவல் நிலையம் அழைத்து விசாரனை செய்த போது தாங்கள் செய்யவில்லை என தெரிவித்து சென்றிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.