நடிகர் சல்மான்கான், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் ’கிஸி கி பாய் கிஸி கி ஜான்’. ஈகைப் பெருநாள் ஸ்பெஷலாக இந்தப் படம் நேற்று வெளியாகியுள்ளது.


வீரம் ரீமேக்:


சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா நடித்த வீரம் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்தப் படத்தை பாலிவுட் மசாலா சேர்த்து பிரமாண்டமாக இயக்கியுள்ளார் ஃபர்ஹான் சம்ஜி. தம்பிகள் மீது பாசமழை பொழிந்த அஜித்தின் கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்க, தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேஜிஎஃப் புகழ் ரவி பர்சூர் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.


முன்னதாக இந்தப் படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் வெளியாகி சல்மான் கான் ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில், கோலிவுட் ரசிகர்களையும் அஜித் ரசிகர்களையும் சற்றே கடுப்பாக்கியது.  இந்நிலையில் காதல், ஆக்‌ஷன், குடும்ப செண்டிமெண்ட், காமெடி என அனைத்தும் கலந்து ஹிட் அடித்த வீரம் படத்தின் இந்தி ரீமேக் எப்படி இருக்கிறது, ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் எனப் பார்க்கலாம்!