மாணவர்கள் பள்ளிக்காலங்களில் அவர்களுக்கு பொதுத்தேர்வு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த தேர்வுகளில் சில மாணவர்கள் எளிதாக தேர்ச்சி அடைகின்றனர். பல மாணவர்கள் தேர்ச்சி அடையாமல் தோல்வி அடைகின்றனர். பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் குடும்பத்தினராலும், அக்கம்பக்கத்தினராலும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கின்றனர். சில மாணவர்கள் தேர்வுகள் தோல்வியால் தற்கொலை முயற்சியை மேற்கொள்கின்றனர். இது தவறான செயல் ஆகும்.


பொதுத்தேர்வு தோல்வி:


ஆந்திரா மாநிலத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த புதன்கிழமை வெளியானது. அந்த மாநிலத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 61 சதவீத மாணவர்களும், 12ம் வகுப்பில் 72 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 9 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பது கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீகாகுலம் மாவட்டத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தால் 17 வயதான மாணவன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதபோல, விசாகப்பட்டினம் மாவட்டத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் சில பாடங்களில் தோல்வி அடைந்த 16 வயது மாணவி ஒருவர், வீட்டிலே தற்கொலை செய்து கொண்டார்.


48 மணி நேரத்தில் 9 பேர்:


அதேபோல, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த சோகத்தில் விசாகப்பட்டினம் காஞ்சரபெலத்தில் 18 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சித்தூரில் 17 வயதே நிரம்பிய 2 மாணவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாததால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதே சித்தூர் மாவட்டத்தில் ஆற்றில் குதித்த மாணவி ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அனகப்பள்ளியில் ஒரு மாணவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் பொதுத்தேர்வு தோல்வி காரணமாக 9 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பது மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது வாழ்க்கையில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது முக்கியமானதே ஆகும். அதேசமயம் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் வாழ்வே முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தம் அல்ல என்பதையும் மாணவர்கள் உணர வேண்டும். பொதுத்தேர்வுகளில் தோல்வி அடைந்தால் மீண்டும் மறுதேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது.


பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களை தரக்குறைவாக பேசுவதும், கேலி செய்வதும் மிகவும் தவறான செயல் ஆகும்.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)


மேலும் படிக்க: Crime: ச்ச்சீ... ச்ச்சீ..! மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு மத்தியில் இளைஞர் செய்த 'அந்த' காரியம்..! அதிர்ச்சியில் பயணிகள்..!


மேலும் படிக்க: Crime: கணவனை உயிரோடு எரித்துக் கொலை செய்த மனைவிக்கு ஆயுள்தண்டனை - நடந்தது என்ன?