Delhi Metro : டெல்லி மெட்ரோ ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் பெண்களுக்கு மத்தியில் திடீரென சுய இன்பத்தில் ஈடுபட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓடும் மெட்ரோவில் செய்த காரியம்:
கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி மெட்ரோ ரயிலில் அரைகுறை ஆடை அணிந்துவந்து இளம் பெண் ஒருவர் பயணம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஓய்வதற்குள் இப்போது அடுத்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது. இந்த முறை மெட்ரோவில் இளைஞர் ஒருவர் அனைவருக்கும் மத்தியில் சுய இன்பம் செய்து கொண்டது அனைவரையும் முகம்சுளிக்க வைத்துள்ளது.
டெல்லி மெட்ரோ ரயிலில் தினமும் ஏராளமானோர் பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். எப்போது பரபரப்பாக இருக்கும் டெல்லி மெட்ரோவில் நேற்று வழக்கம் போல் பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, மெட்ரோ ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போது பெண்ணின் அருகே அமர்ந்திருந்த நபர் ஒருவர் சுய இன்பம் செய்துள்ளார். இது அங்கே இருந்தவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வீடியோ வைரல்
அந்த நபர் தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டு சுய இன்பம் செய்து கொண்ட சம்பவத்தை அந்த ரயிலில் பயணித்த சக பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த சம்பந்தமான வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில், ”டெல்லி மெட்ரோவில் இதுபோன்று நடப்பது இது முதல் முறையல்ல. எனவே பயணிகள் அனைவரும் பொறுப்புடம் நடத்துக் கொள்ள வேண்டும்.
அனைவரையும் முகம் சுளிக்கும் அளவில் நடந்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இதுபோன்று மெட்ரோவில் யாராவது நடத்துக் கொண்டால் சக பயணிகள் ஹெல்ப்லைனுக்கு (Help Line) தகவல் தெரிவிக்க வேண்டும். மெட்ரோ ரயிலின் விவரம், நேரம், இடம் போன்ற விவரத்துடன் தெரிவிக்க வேண்டும்” என டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சுவாதி மலிவால் கண்டனம்
இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாமி மலிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இவர் ட்விட்டரில் கூறியதாவது, "டெல்லி மெட்ரோவில் நபர் ஒருவர் ஆபாச செயலில் ஈடுபடும் காட்சியை பார்த்தேன். அது மிகவும் அருவறுப்பாக இருக்கிறது.
இதுபோன்ற கேவலமான செயலில் ஈடுபட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க டெல்லி காவல்துறை மற்றும் டெல்லி மெட்ரோவுக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன்" என்று டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாமி மலிவால் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.