ஒரு பெண்ணை 8 ஆண்கள் சேர்ந்து மாதக்கணக்கில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் ஹரியானாவில் அரங்கேறியுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் ஹரியானாவில் ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு பெண்ணை 8 ஆண்கள் சேர்ந்து மாதக்கணக்கில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள ஹரியானா போலீசார், '' அந்தப்பெண் அவரது கணவர் குடும்பத்தின் உறவினர்களால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமையை வீடியோவாக பதிவு செய்த குற்றவாளிகள் அதை வைத்து அவரை மிரட்டியுள்ளனர். மிரட்டி மிரட்டியே மாதக்கணக்கில் பாலியல் வன்கொடுமையை அரங்கேற்றியுள்ளனர். பொறுமையிழந்த அந்தப்பெண் மிரட்டலுக்கு பயப்படாமல் காவல்நிலையத்தில் புகார் அளிக்கும்போதுதான் இந்த விவரமே வெளிவந்துள்ளது. 




இது குறித்து மீடியாவிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண், வரதட்சணை பிரச்னை காரணமாக என்னுடைய கணவர் என்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தினார். சில மாதங்களுக்கு முன்பு, குடித்துவிட்டு வந்த அவர் என்னுடன் தகராறில் ஈடுபட்டார். வரதட்சனை பிரச்னையை மீண்டும் பேசிய அவர் என்னை நடு இரவில் வீட்டை விட்டு வெளியேற்றினார். நான் வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்தேன். அப்போது அங்கு வந்த என் கணவரின் உறவினர்கள் 8 பேர் என்னைத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்தனர். அதனை வீடியோவாகவும் எடுத்துக்கொண்டனர். வீடியோவை இணையத்தில் பதிவேற்றுவேன் என மிரட்டியே என்னை மாதக்கணக்கில் பாலியல் வன்கொடுமை செய்தனர். என்றார்.


இந்த விவகாரத்தை தன் கணவரிடன் அப்பெண் தெரிவித்த போது இது குறித்து வெளியே எதுவும் பேசக்கூடாது என வாயை அடைத்துள்ளார். மேலும் வீடியோவை வெளியிடக்கூடாது என்றால் பணம் தர வேண்டுமென்றும் கணவரின் குடும்பம் அப்பெண்ணை மிரட்டியுள்ளது.




பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை அடுத்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோவை அழிக்கும் வேலையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய அனைவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்


சமீபத்தில், டெல்லியில் நிர்பயாவுக்கு நேர்ந்தது போல் கொடூரம் மும்பையில் பெண் ஒருவருக்கு நேர்ந்தது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும், வன்கொடுமை பிரச்னைகள் முடிந்தபாடில்லை. தூக்கு தண்டனை எவ்வித அச்சத்தையும் ஏற்படுத்தியாகத் தெரியவில்லை. ஹைதராபாத்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவமாக இருக்கட்டும், காஷ்மீரில் கத்துவா சிறுமிக்கு நேர்ந்த கொடூரமாக இருக்கட்டும் நிர்பயாக்களை உருவாக்கிக் கொண்டே தான் இருக்கின்றன. ஹர்த்ராஸ், உனாவோ என்று வன்கொடுமைகளின் களம் மட்டும் தான் மாறியுள்ளது.


கொஞ்சம் ‛கப்’... நிறைய ‛குப்’... மீண்டும் கடா மார்க்... இன்னும் என்னவெல்லாம் பார்க்கணுமோ!