மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்டை மாநிலமான புதுச்சேரி மதுபானங்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை தடுப்பதற்கு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தும், இந்த மது விற்பனையை தடுத்து நிறுத்துவது என்பது முடியாத காரியமாக இருந்து வருகிறது.




இதுபோன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் பாண்டிச்சேரி மாநில மது விற்பனை என்பது தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மயிலாடுதுறை மாவட்ட  மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினர்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், காவல்துறையினரின் கண்களில் மண்ணைத் தூவும் விதமாக தொடர்ந்து விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் காவல்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு  கள்ளச்சாராயம் மற்றும் பாண்டிச்சேரி மது பானங்கள் விற்பனையை கண்டுகொள்வதும் இல்லை என கூறப்படுகிறது.




Agnipath Scheme: உயிர்த் தியாகம் செய்தால் ரூ.1 கோடி...பெண்களுக்கு வாய்ப்பு! அக்னிபத்தில் அதிரடி அறிவிப்புகள்!


இதற்கு எடுத்துக்காட்டாக கடந்த சில மாதங்களுக்கு முன் முன்னாள் சாராய வியாபாரியை மீண்டும் சாராயம் விற்பனை செய்ய கூறி காவலர்கள் மிரட்டல் விடுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கள்ளச்சாராயம் விற்பனைக்கு துணை போனதாக சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைத்து காவலர்களும் கூண்டோடு பணியிடை மற்றம் செய்யப்பட்டனர். அதேபோன்று கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் வீடியோ காட்சிகளும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.


தேனி : மீண்டும் கலெக்டர் பெயரில் வாட்ஸ் அப் கணக்கு - மர்ம நபருக்கு சைபர் க்ரைம் வலைவீச்சு




இந்நிலையில் மயிலாடுதுறை  மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்துக்கு உட்பட்ட சீர்காழி, திருமுல்லைவாசல், இரணியன் நகர், அகல திருக்கோலக்கா உள்ளிட்ட இடங்களில் கள்ளச்சாராயம் விற்பதாக சீர்காழி காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் காவல்துறையினர் புகார் வந்த பகுதிகளில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சீர்காழி கண்ணன், திருமுல்லைவாசல் லட்சுமி , ராஜ்குமார், இரணியன் நகர் சேகர், ஈசானிய தெரு சண்முகம், அகல திருக்கோலக்கா பாபு, பெரியநாயகி உள்ளிட்டோர் பாண்டி சாராய பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து சாராயம் விற்பனையில் ஈடுபட்ட ஏழு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 660 லிட்டர் பாண்டி சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து சாராயத்தை மணலில் கெட்டி காவலர்கள் அழித்தனர்.