Affair Crime: அமெரிக்காவில் மாமனார் மற்றும் மருமகள் இடையே நீடித்த தகாத உறவு, கடைசியில் கொலை முயற்சியில் முடிவடைந்துள்ளது.
மாமனாருடன் மருமகள் தகாத உறவு
சமூக வரைமுறைகளை மீறி உருவாகும் சில உறவுகள் கேட்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கலாம். சினிமாக்களில் காணப்படும் சில சம்பவங்கள் தற்போதெல்லாம் உண்மையிலும் அரங்கேற தொடங்கிவிட்டன. அத்தகைய ஒரு சம்பவம் அமெரிக்காவின் ஃபுளோரிடவைல் நடந்துள்ளது. தனது 33 வயது மருமகளுடன் இரண்டு ஆண்டுகள் தகாத உறவு வைத்திருந்த மாமனாரே, திடீரென அந்த பெண்ணை கொலை செய்ய முயற்சித்துள்ளார். இந்த மாமனார் - மருமகள் ஜோடி சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக, முறையே தங்கள் மனைவி மற்று கணவனை பிரிந்து வந்துள்ளனர். ஆனால், இறுதியில் அவர்களுக்கு இடையிலேயே மோதல் வெடித்துள்ளது.
மகனுக்கு துரோகம் செய்த தந்தை
டெய்லி ஸ்டார் எனும் அமெரிக்க ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, “கடந்த 2021ம் ஆண்டு அலெக்ஸ் (34 வயது) என்பவருடனான திருமணத்தை முறித்துக்கொண்ட ஜாஸ்மின் வில்டே (33), தனது முன்னாள் கணவரின் தந்தையான மார்க் கிப்பனுடன் (62) நெருங்கி பழக தொடங்கியுள்ளார். வெளியூர்களிலும் உல்லாசமாக சுற்றி திரிந்து தங்களது குடும்பத்தினர் யாருக்கும் தெரியாமல் அதனை ரகசியமாகவும் காத்து வந்துள்ளனர். முன்னாள் மருமகளுடனான உறவை தொடர்ந்து தனது மனைவியை விவாகரத்து செய்த கிப்பன், சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டில் தனியே வசிக்க தொடங்கியுள்ளார்.
தந்தையை கொல்ல முயன்ற மகன்:
தனது முன்னாள் மனைவியுடனேயே தனது தந்தை உறவில் இருப்பதை அறிந்ததும், அலெக்ஸ் மற்றும் கிப்பன் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மகன் தனது தந்தை மீது கார் ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த உறவு குறித்து அறிந்ததும் தந்தையாலும், முன்னாள் மனைவியாலும் துரோகம் செய்யப்பட்டதாக உணர்ந்து, இந்த கொலை முயற்சி நடந்ததாக அலெக்ஸின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
காதலியை கொல்ல முயன்ற மாமனார்:
இந்த சூழலில் தான் கிப்பன் தனது காதலியும் முன்னாள் மருமகளான ஜாஸ்மினை, நீச்சல் குளத்தில் உள்ள நீரில் மூழ்கடித்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதுதொடர்பாக போலீசார் வெளியிட்ட தகவலின்படி, ஜாஸ்மினின் தலையை வலுக்கட்டாயமாக பிடித்து நீரில் மூழ்கடிக்கச் செய்து மூச்சு திணறலை ஏற்படுத்தியதாக” கிப்பன் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. அவரின் முயற்சியில் இருந்து தப்பிக்கும் ஜாஸ்மினின் முயற்சிகள் தோல்வியுற, அக்கம்பக்கத்தினர் இந்த சம்பவத்தை கண்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துனர். இதன் மூலம் ஜாஸ்மினின் உயிர் தப்பியுள்ளது. இந்த ஜோடியுடன் ஜாஸ்மினின் 9 வயது மகளும் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கொலை முயற்சி ஏன்?
கிப்பன்ஸ் எழுதிய உயிலில் தனது பெயர் இல்லாத விவகாரத்தில் தங்களுக்கு இடையேயான இந்த பிரச்னை ஏற்பட்டதாக ஜாஸ்மின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வாக்குவாதத்தில், ”ஜாஸ்மின் தன்னை அறைந்ததார். அதனாலேயே ஆத்திரமடைந்து அவரது தலையை பிடித்து நீரில் மூழ்கச் செய்தேன். ஆனால் , அவரை கொல்ல வேண்டும் என நான் விரும்பவில்லை. சம்பவத்தின் போது நாங்கள் இருவருமே மதுபோதையில் இருந்தோம்” என கைது செய்யப்பட்டுள்ள கிப்பன் விளக்கமளித்துள்ளார். லைட்டிங் டெக்னீஷியனான கிப்பன் பிரபல இசைக் கலைஞர்களான எட் ஷீரன், சாம்ஸ்மித் மற்றும் பலோமா ஃபெயித் ஆகியோருடன் எல்லாம் சேர்ந்து பணியாற்றியுள்ளாராம்.