Trump USA India: அதிபர் பதவியை பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் லாபம் பார்க்கவும் ட்ரம்ப் முயன்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

வரிகளை குவிக்கும் அதிபர் ட்ரம்ப்:

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை வாங்குவதால் தான், உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். இதன் காரணமாக நமது நாட்டின் மீது 50 சதவிகிதன் வரி விதிப்பையும் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்து வரும் சீனா மற்றும் ஐரோப்பா நாடுகள் மீது எல்லாம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இந்தியா மீது மட்டும் இந்த வரிப்போரை ட்ரம்ப் தொடங்கியுள்ளார். அமெரிக்காவே பல கனிமங்களை இன்றளவும் ரஷ்யாவிடம் இருந்து வாங்கி வந்தாலும், இந்தியா மீது மட்டும் காழ்ப்புணர்ச்சியுடன் இந்த வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். உண்மையில் உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்ற பொதுநலனை விட, சில சுய நலன்களுக்காகவே இந்தியாவிற்கு ட்ரம்ப் அழுத்தம் தருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ட்ரம்பின் பொறாமை

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை தாண்டி, தடையற்ற இலவச வர்த்தக ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட விவசாய பொருட்களுக்கும், அசைவ பாலுக்கும் இந்திய சந்தையை திறந்துவிட வேண்டும் என ட்ரம்ப் அழுத்தம் கொடுக்கிறராராம். மேற்கத்திய நாடுகளை தாண்டி தெற்காசிய நாடுகளின் வளர்ச்சியை ட்ரம்ப் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதுபோக தனத் ட்ரம்ப் எம்பையர் நிறுவனத்தை மேலும் வலுப்படுத்தவும், அதிபர் பதவியை சாதகமாக பயன்படுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ட்ரம்புக்கான காரணங்கள்:

1. நோபல் பரிசு மீது தீவிரம்

முன்னாள் அதிபர் ஒபாமாவை போன்றே தானும் நோபல் பரிசை வெல்ல வேண்டும் என்ற ஆசையுமே ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு காரணமாக தெரிகிறது. இதற்காக பல போர்களை தானே முடிவுக்கு கொண்டு வருவதை போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார். அதோடு, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற தன்னுடன் ஒத்துப்போகும் நாடுகளை கொண்டு, நோபல் பரிசு வழங்கவும் வலியுறுத்த செய்கிறார். ஆனால், பாகிஸ்தான் உடனான ராணுவ மோதலை முடிக்க ட்ரம்ப் உதவினார் என்ற கருத்தை இந்தியா ஏற்க மறுப்பது அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் நம் நாட்டின் மீது அதிக வரி விதிக்க ஒரு காரணமாக கருதப்படுகிறது.

2. பாகிஸ்தான் ஆதரவு:

ட்ரம்ப் அதிபர் ஆவதற்கு முன்பாகவே மிகப்பெரிய தொழிலதிபர் ஆவர். அதன்படி, அவரது ட்ரம்ப் எம்பையர் நிறுவனத்திற்கு பாகிஸ்தான் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளித்துள்ளது. க்ரிப்டோ கரன்சி, கச்சா எண்ணெயை அகழ்ந்து எடுப்பது, அரிய தனிமங்கள் தொடர்பான ட்ரம்ப் எம்பையரின் பணிகளுக்கு பாகிஸ்தான் முழு ஆதரவு அளித்துள்ளது. தனது தனிப்பட்ட லாபங்களுக்கான பாகிஸ்தான் உடன் நெருக்கம் காட்டுவதும், இந்தியாவிற்கு எதிரான அவரது செயல்பாட்டிற்கு மற்றொரு காரணமாக உள்ளது. பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக பாகிஸ்தான் மீது ட்ரம்ப் வைத்த பல குற்றச்சாட்டுகளையும் தற்போது அவரே மறந்துவிட்டார். 

3. ட்ரம்பின் பொறாமை

சர்வதேச பொருளாதாரத்தில் மேற்கத்திய நாடுகள் மட்டுமே ஒரு காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தன. ஆனால், முன்பு அடிமை நாடுகளாக இருந்த தெற்காசிய நாடுகளும் பெரும் வளர்ச்சியை கண்டு வருகின்றன. இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்ற தொடங்கியுள்ளன. பல உலக நாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் உற்பத்தியாளர்களாகவும் உருவெடுத்துள்ளன. இந்த வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத மேற்கத்திய நாடுகளின் குரலாகவே ட்ரம்ப் செயல்படுவதாக கூறப்படுகிறது.