செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அருகே வெங்கடாபுரம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் மூடப்படாத கழிவுநீர் தொட்டியில் 6 வயது சிறுவன் விழுந்து உயிரிழந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்துள்ள, பாலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாஸ்திரம் பாக்கம் கிராமத்தில் அருந்ததியர் தெருவில் வசித்து வரும் மணிகண்டன் வயது ( 38 ). இந்நிலையில் மணிகண்டன் ஏற்றுமா இரவு 7 மணி அளவில் அளவில் குடிநீர் எடுக்க வேண்டி தனது, மகன் பிரதீப் வயது 6 என்பவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வெங்கடாபுரம் பஞ்சாயத்து, அலுவலகம் அருகில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது, தனது மகன் அங்கே அருகிலேயே விளையாடிக் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். தண்ணீர் பிடித்துக் கொண்டு சுமார் பத்து நிமிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது தனது மகனை கவனிக்காமல் இருந்துள்ளார். மேற்படி பிரதீப் விளையாடிக் கொண்டே கழிவுநீர் தொட்டியில் விழுந்து உள்ளார் .
இதனை கவனிக்காமல் மேற்படி பிரதிப்பை அக்கம் பக்கம் தேடி கிடைக்காததால், மேற்படி, தொட்டியை பார்த்த போது மயங்கி கிடந்த பிரதிப்பை எஸ்பி கோயில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மருத்துவர் பரிசோதனை செய்து பார்த்த போது பிரதீப் இறந்து விட்டதாக மருத்துவர் கூறியதாக தகவல் மேற்படி பிரதிப்பின், பிரேதத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சவுக்கிடங்களுக்கு உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற செயலாளர் (பொறுப்பு) ரேணுகாதேவி மற்றும் செப்டிக் டேங்க் ஆபரேட்டர் குணசேகரன் ஆகிய இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் மேலும் இதுகுறித்து சார ஆட்சியர் தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்