இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் கடந்த ஜனவரி 18 ஆம் தேதி நடைபெற்றது. 


இப்போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 50 ஓவர்களில் சுப்மன் கில்லின் இரட்டை சதத்துடன் 349 ரன்கள் குவித்த போதும் போராடியே வெற்றி பெற்றது. 


இச்சூழலில், சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இந்தியா இங்கிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணியும், தொடரை இழக்கக்கூடாது என நியூசிலாந்து அணியும் முனைப்பு காட்டியது.


டாஸ் போடுவதற்காக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நியூசிலாந்தி அணியின் கேப்டன் லாதம் ஆகியோர் மைதானத்திற்கு சென்றனர். கமெண்ட்ரி பாக்ஸில் இருந்த ரவி சாஸ்திரி, போட்டியின் ரெஃப்ரி ஜவகல் ஸ்ரீநாத் முன்னிலையில் ரோகித் சர்மா நாணயத்தை சுண்டினார். லாதம் தலை என சொல்ல, நாணயத்தில் பூ விழுந்தது. 


இதையடுத்து, ரோகித் சர்மாவிடம் பேட்டிங்கா? பவுலிங்கா? என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ”அது வந்து நாங்கள் என்ன செய்ய போகிறோம். என்ன செய்ய போகிறோம் என்றால்..” என சற்று நேரம் தலைமீது கை வைத்து யோசிக்க தொடங்கி விட்டார். 


இதனால் லாதம் மட்டுமின்றி, அருகே பயிற்சியில் ஈடுபட்டு இருந்த சக இந்திய வீரர்களும், அங்கு நடப்பதை கண்டு சிர்த்து விட்டனர். பின்னர் ஒரு வழியாக ”பந்துவீச.. ஆமாம் நாங்கள் பந்துவீச போகிறோம்”  என ரோகித் சர்மா உறுதிப்படுத்தினார்.


ரோகித் சர்மாவின் இந்த செயல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் ரோகித் சர்மாவை கிண்டலடித்தும், நகைச்சுவையாக மீம்ஸ் போட்டு வருகின்றனர்.


டாஸ் போட சென்றுவிட்டு, பேட்டிங் தேர்வு செய்வதா பவுலிங் தேர்வு செய்வதா என கேப்டன் குழம்புவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னரும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.


 






பாகிஸ்தான் கேப்டனாக ஜாவித் மியாண்டட் இருந்தபோதும் இதுபோன்று நிகழ்ந்துள்ளது. டாஸ் போட சென்றுவிட்டு, அணியின் முடிவை அவர் மறந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஜாவித், ரோகித் ஆகிய இருவரும் டாஸை மறக்கும் வீடியோவை வெளியிட்டு இணையவாசிகள் கலாய்த்து வருகின்றனர்.


குறிப்பாக, இதை வைத்து மீம் கிரியேட்டர்கள் மீம்ஸ் போட்டு வருவதற்கு அனைவரும் லைக்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.