தென்மண்டலத்தில் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் விற்பனைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வரப்படுகிறது. கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை காவல்துறையினர் தொடர்ந்து எடுத்து வருகின்றனர்.  கைது நடவடிக்கை, போதை வஸ்துகள் பறிமுதல் என்பதோடு அல்லாமல், நடவடிக்கையின் தீவிரத்தை அதிகப்படுத்தும் விதமாக, கடந்த 2022-ம் ஆண்டில் 13 கஞ்சா வழக்குகளில் நிதி விசாரணை மேற்கொள்ளப்பட்டதில்,



 

அவ்வழக்குகளின் குற்றவாளிகள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் ரூபாய் 12 அரைகோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களும் அவற்றோடு அவர்களின் அசையா சொத்துக்களையும் முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாநகர் பகுதிக்கு உட்பட்ட இடத்தில் சொகுசு கார்கள் மூலம் கஞ்சா கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கண்ணனேந்தல் ஜி.ஆர்., நகர் 3-வது தெரு பகுதியில் வசிக்கக்கூடியவர் பரமேஸ்வரன். இவரது மனைவி விஜயலெட்சுமி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞராக பணி செய்வதாக சொல்லப்படுகிறது. இவர்கள் அந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து கடந்த ஓராண்டாக தங்கி வருகிறார்கள். இந்தநிலையில் மதுரை கடச்சனேந்தல் - ஊமச்சிகுளம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபொழுது காரில் கஞ்சா கடத்தப்பட்டதாக பரமேஸ்வரன் கைது செய்யப்பட்டார்.




 

இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் ஆந்திராவில் இருந்து தொடர்ச்சியாக கஞ்சாவை கடத்தி வந்து மதுரை தேனி திண்டுக்கல் ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் கஞ்சாவை விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து இதனையடுத்து பரமேஸ்வரனிடம் இருந்து 5 சொகுசு கார்கள், 4 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான ரொக்க பணம் 73 கிராம் தங்க நகைகள், 14 செல்போன்கள், லேப்டாப், 2 மோடம், கத்தி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ளனர். 



 இதனை தொடர்ந்து அவரிடம் நடத்தி விசாரணையில் ஆடம்பர கார்கள் மூலமாக எஸ்கார்டு போன்று வரிசையாக வந்து கஞ்சாவை கடத்தி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது இது குறித்து திருப்பாலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கஞ்சா கடத்தல் ஈடுபட்ட பரமேஸ்வரனை கைது செய்ததோடு அவருடன் உதவியதாக இருந்ததாக மனைவி விஜயலெட்சுமி மீதும் வழக்குபதிவு செய்து அவரையும் தேடி வருகின்றனர். மதுரையில் ஆடம்பர கார்களில் கஞ்சாவை கடத்தி விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.