அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் வேலி வங்கி பெரும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில், உலகளவில் உள்ள பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ளது.
பங்கு சந்தை நிலவரம்:
இன்று காலை தொடங்கிய பங்கு சந்தையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 329.62 புள்ளிகள் குறைந்து 57,226 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 103.65 புள்ளிகள் குறைந்து 16,868.50 புள்ளிகளாகவும் உள்ளது.
துறை ரீதியாக பார்க்கையில் உலோகம் 3 சதவீதமும், பொதுத்துறை வங்கி 1.5 சதவீதமும் இன்று காலையில் சரிந்தன.
நிஃப்டியில் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், இண்டஸ்இண்ட் பேங்க், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஓஎன்ஜிசி போன்ற பங்குகள் விலை இறக்கத்திலும், பிபிசிஎல், பவர் கிரிட், டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஆட்டோ, ஏசியன் பெயிண்ட்ஸ் போன்ற பங்குகள் விலை ஏற்றத்திலும் வர்த்தகமாயின.
கடந்த சில நாட்களாக இந்திய பங்கு சந்தை சரிவுடன் காணப்பட்டு வரும் நிலையில், இன்றும் சரிவுடன் காணப்படுவது முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ரூபாயின் மதிப்பு:
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் குறைந்து 82.67 ஆக உள்ளது.
Also Read: Gold, Silver Price: 3 நாட்களுக்கு பின் குறைந்த தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் இதோ...!