காஞ்சிபுரம் அடுத்துள்ள காரை பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் அழகரசன். இவர் அங்குள்ள நிறுவனங்களிலிருந்து ஸ்கிராப் எனப்படும் கழிவுப் பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 12 ந்தேதி மாலை காரையில் உள்ள உறவினரின் தோட்டத்தில் மது அருந்திக் கொண்டிருந்த போது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் தோட்டத்தில் புகுந்து அழகரசனை சரமாரியாக தலையில் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.




படுகாயமடைந்த அழகரசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். சம்பவ இடத்திற்கு நேரில் வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா அவர்கள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்தார். இச்சம்பவம் குறித்து காஞ்சி தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தனி படையுடன் இணைந்து குற்றவாளிகளை தேடி வந்தனர். குற்றவாளிகள் சென்னையில் பதுங்கி இருப்பதாக மாவட்ட தனிப்படைக்கு வந்த ரகசிய தகவலையடுத்து சென்னை கொருக்குப்பேட்டை சிக்னலில் வைத்து நான்கு பேரையும் மடக்கிப்பிடித்து காஞ்சிபுரம் கொண்டு வந்தனர்.




இதில் கோனேரிகுப்பம் பகுதியை சேர்ந்த வேலு,
காரைப் பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேசன் , ஸ்ரீதர் ,விக்னேஷ் ஆகிய நான்கு பேரிடமும் விசாரணை செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பப்பட்டனர்.