நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள சாத்தான்குளம் கரையடி காலனியை சேர்ந்தவர் திருநங்கை உதயா, வயது 28. இவர் தற்போது பழவூரில் வசித்து வருகிறார். இவருக்கு கூடங்குளம் ஸ்ரீரங்கநாராயணபுரத்தை சேர்ந்த பால ஆனந்த் வயது 19 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது,. அதன் பின்பு அது காதலாக மாறியதாக கூறப்படுகிறது, இதனையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக இருவரும் திருமணம் செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 23.03.22-ஆம் தேதி பாலஆனந்த் உதயாவை தேடி பழவூர் வந்துள்ளார். இதனையறிந்த பால ஆனந்தின் அப்பா பாலமுருகன், தம்பி சுபாஷ், மற்றும் உறவினர்கள் மணிகண்டன், சக்திவேல் மற்றும் சிலர் காரில் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.
அதன் பின்னர் பழவூரில் இருந்த மகன் பாலஆனந்த் மற்றும் திருநங்கை உதயா ஆகிய இருவரையும் காரில் அழைத்துக்கொண்டு சென்றுள்ளனர். பின்பு திருநங்கை உதயாவை மட்டும் 24.03.22 அன்று கூடங்குளம் காவல் நிலையத்தில் விட்டுவிட்டு மகன் பால ஆனந்தை அழைத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
திருநங்கை உதயாவை, பால ஆனந்த் உறவினர்கள் அடித்து துன்புறுத்தி பின்னர் விட்டு சென்றதாக கூறப்படுகிறது. உதயா கண்ணுக்கு கீழே வீக்கமடைந்த நிலையில் கூடங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற நிலையில் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளார். அங்கு அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருநங்கை உதயா பழவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பால ஆனந்த், பாலமுருகன், லெட்சுமி, சக்திவேல், மணிகண்டன், ஆகியோர் மீது 74/22 U/s 147,294(b), 323,355,506 (i) IPC பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்த நிலையில் மேலும் சிலரை பழவூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது குறித்து திருநங்கை உதயாவின் உறவினர் கூறும்பொழுது, ஈவு இரக்கமின்றி பால ஆனந்தின் உறவினர்கள் உதயாவை அடித்து துன்புறுத்தி உள்ளனர், காரில் கடத்தி சென்று 15 பேர் சேர்ந்து அடித்து துன்புறுத்தி விட்டு சென்றுள்ளனர், இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளோம், ஒரு திருநங்கையை இது போன்று அடித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது, காவல்துறை இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்,
அதன் முழு வீடியோ லிங்க் இதோ