3 வயது சிறுமிக்கு பக்கத்து வீட்டு பெண்ணின் நண்பரால் பாலியல் வன்கொடுமை - இருவர் கைது - உபியில் பகீர்!

இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 

Continues below advertisement

உத்தரப்பிரதேசத்தில் 3 வயது சிறுமியை பக்கத்து வீட்டு பெண்ணின் ஆண் நண்பர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 

Continues below advertisement

உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்டவரின் பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டில் இந்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. குற்றத்தை நேரில் பார்த்த பெண்ணும், குற்றம் சாட்டப்பட்ட அவரது ஆண் நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கூறுகையில், “எனது மகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தார். அவருக்கு சாக்லேட்டுகள், சிப்ஸ்கள் மிகவும் பிடிக்கும். அதைக்காட்டிதான் குழந்தையை அழைத்திருக்கிறார்கள். 

மீண்டும் குழந்தை வீட்டிற்கு வந்தபோது ரத்தபோக்கு இருந்தது. இடுப்பை காட்டி வலிக்கிறது என கூறினார்” எனத் தெரிவித்தார். 

இதையடுத்து குழந்தையின் தாயார் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்தனர். 

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி கூறுகையில், “"அந்தப் பெண்ணின் புகாரின் அடிப்படையில், அவர்களது பக்கத்து வீட்டுக்காரர், அவரது ஆண் நண்பர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார். 

தற்போது, ​​சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, ஆகஸ்ட் 2024 இல், பண்டா மாவட்டத்தில் 14 வயது சிறுமி மூன்று நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. விவரங்களின்படி, இந்த சம்பவம் ஜூலை 29 அன்று நடந்துள்ளது, அப்போது ஒரு வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசிக்கும் சிறுமியை, பக்கத்து வீட்டுப் பெண் ஒருவர் மோமோக்களை வழங்குவதாகக் கூறி சந்தைக்கு அழைத்துச் சென்றார்.

காவல்துறை புகாரில், குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியின் குளிர்பானத்தில் மயக்க மருந்துகளை கலந்து, பாதிக்கப்பட்டவரை மயக்கமடையச் செய்ததாகக் கூறப்பட்டது. பின்னர், சிறுமி ஒரு அறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மறுநாள் காலையில், பாதிக்கப்பட்டவருக்கு சுயநினைவு திரும்பியதும், குற்றவாளிகள் அவளை ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola