தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி நீராவி முருகன். இவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக நீராவி முருகனை திண்டுக்கல் போலீசார் தேடி வந்துள்ளனர். அவர் திருநெல்வேலியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


இதையடுத்து, நெல்லை களக்காடு அருகே நீராவி முருகனை போலீசார் சுற்றிவளைத்து பிடிக்க முயன்றபோது அவர்கள் மீது நீராவி முருகன் தாக்குதல் நடத்தியுள்ளார். இதையடுத்து, போலீசார் நீராவி முருகனை துப்பாக்கியால் சுட்டனர். இதில், நீராவி முருகன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.


நீராவி முருகனை பிடிக்க முற்பட்டபோது அவர் அரிவாளால் வெட்டியதால் எஸ்.இ. இசக்கிராஜா, காவலர்கள் உள்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.