புதுச்சேரி வில்லியனூர் அருகே சுல்தான்பேட்டை வளர்பிறை நகரை சேர்ந்தவர் முகமது புகாரி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பாத்திமா ஜின்னா (வயது 43). இவர் தனது மகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி பாத்திமா ஜின்னா தனது வீட்டை பூட்டிவிட்டு மகளுடன் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பாத்திமா ஜின்னாவுக்கு தெரிவித்தனர்.


 




 


இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், வெளியூரில் இருந்து சுல்தான்பேட்டைக்கு வந்து வீட்டை பார்வையிட்டார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 26 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.84 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இந்த கொள்ளை குறித்து வில்லியனூர் போலீசில் பாத்திமா ஜின்னா புகார் அளித்தார். அதன்பேரில் கொள்ளை நடந்த வீட்டை போலீசார் பார்வையிட்டனர்.  பாத்திமா ஜின்னாவின் வீடு பூட்டியிருந்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் கதவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


 




புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர்  கருணாகரன் அரசு சார்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் இவர் தனது மனைவி ராஜேஸ்வரி மற்றும் மூன்று குழந்தைகள் உடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மாலை கருணாகரன் பணிக்கு சென்று விட்டதால் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அருகே இருக்கும் தங்களது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர், இதனை நோட்டம் விட்ட மர்ம நபர் கருணாகரன் வீட்டின் கதவை இரும்பு கம்பியால் உடைத்து வீட்டின் உள்ளே சென்று பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை திருடி சென்றுள்ளார், பின்னர் வீட்டிற்கு வந்த ராஜேஸ்வரி வீட்டின் கதவு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.


மேலும்  இந்த திருட்டு சம்பவம் குறித்து ராஜேஸ்வரி லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார், பின்னர் புகாரின் அடிப்படையில் போலிசார் வழக்கு பதிவு செய்து கைரேகைகள் மற்றும்  மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை எற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க : 


 


புதுச்சேரி : தொடர் கஞ்சா விற்பனை : சிறுவர்களே குறி.. சிக்கிய இளைஞர்கள் கைது..!


 


புதுச்சேரி: 98 பேருக்கு கொரோனா தொற்று; 3 பேர் உயிரிழப்பு !