தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ரேணுகா (வயது 30). இவர் தனது சகோதரர் குருபரனுடன் திருச்சியில் செல்போன் உதிரிபாகங்கள் வாங்க திருச்செந்தூரில் இருந்து பேருந்தில் நேற்று முன்தினம் திருச்சி வந்தனர். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்தில் இருந்து இறங்கிய அவர்கள் வில்லியம்ஸ் சாலையில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்தனர். பின்னர் ஏற்கனவே தாங்கள் வைத்து இருந்த பணத்துடன் சேர்த்து மொத்தமாக ரூ.2.75 லட்சத்தை ஒரு பையில் வைத்து நடந்து சென்றனர். அப்போது அங்கு வந்த 2 பேர் அவர்களிடம் பேச்சுகொடுத்து கொண்டே ரேணுகாவிடம் இருந்த பணப்பையை பறித்து காரில் ஏறி தப்பி செல்ல முயன்றனர். இதனால் ரேணுகாவும், குருபரனும் கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு ஓடி வந்த ஆட்டோ டிரைவர் ராஜா மற்றும் பொதுமக்கள் அவர்களை விரட்டி பிடித்தனர். இதில் காருக்குள் அமர்ந்து இருந்த 3 பேர் பணத்துடன் தப்பி ஓடினர். 2 பேர் மட்டும் சிக்கி கொண்டனர்.
மேலும் விசாரணையில் அவர்கள், திண்டுக்கல்லை சேர்ந்த முகமதுஅன்சாரி, மதுரையை சேர்ந்த ஜெகநாதன் என்பது தெரியவந்தது. பின்னர் பிடிபட்ட 2 பேரையும் காருடன் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் முகமது அன்சாரி மீது ஏற்கனவே வழிப்பறி வழக்கு உள்ளது. இந்த கும்பல் பல்வேறு நபர்களிடம் பணத்தை இரட்டிப்பாக்கி கொடுப்பதாக கூறி மோசடிகளில் ஈடுபட்டு வருபவர்களா? இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும், இந்த சம்பவத்திலும் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி வழிப்பறியை அரங்கேற்றினார்களா? எனவும் தெரியவில்லை. இந்த சம்பவத்தில் பணத்துடன் தப்பி ஓடிய 3 பேரை வலைவீசி தேடி வருகிறோம் என்றும், அவர்களை பிடித்தால் தான் இந்த வழிப்பறி சம்பவத்தின் உண்மையான காரணம் என்ன?, இதன் பின்புலத்தில் யாரெல்லாம் உள்ளனர் என்பது தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
சைபர்கிரைம் காவல்துறையினர், தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பார்சலில் வெளிநாட்டு பணம் இருப்பதால் அதை இந்திய ரூபாயாக மாற்ற வேண்டும். அதற்கான அரசின் அனுமதி பெற ரூ.60 ஆயிரம் செலவாகும் என்று கூறுவார். அதன்பிறகு மேலும் ஒரு காரணத்தை கூறி பணம் கேட்பார்கள். இப்படியே கிட்டத்தட்ட ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கறந்துவிடுவார்கள். ஆனாலும் விலையுயர்ந்த அந்த பார்சல் வீடு வந்து சேராது. இதுபோன்ற மோசடி சம்பவங்கள் அதிகமாக நடப்பதாகவும், படித்தவர்கள் கூட இந்த மோசடியில் சிக்கி பணத்தை இழந்து வருவதாகவும் சைபர்கிரைம் காவல்துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர். ஆன்லைன் மோசடி குறித்த புகார்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டு இருப்பதாகவும், இவ்வாறு பாதிக்கப்படும் பொதுமக்கள் சைபர் கிரைம் உதவி எண்-1930-வில் புகார் செய்யலாம் என்றும், இணையவழியில்https://cybercrime.gov.inமூலம் புகார் அளிக்கலாம் என்றும் கூறி உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்