கேரள மாநிலம் மலப்புரத்தில் காதலால் ஏற்பட்ட கர்ப்பத்தினால் 17 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்துள்ளார். அதுவும், வெளியே தெரியக் கூடாது என்பதற்காக யூடியூப்பை பார்த்தே அந்த சிறுமிக்கு பிரசவமும் நடந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கேரள மாநிலம் கொட்டகால் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவி தற்போது தாயாக மாறியுள்ளார். பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 21 வயது பையனும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல்கதை இரு வீட்டாருக்குமே தெரியும். ஆனால் மாணவிக்கு 17 வயதுதான் என்பதால், 18 வயது பூர்த்தி அடைந்ததும் திருமணம் நடத்தலாம் என அவர்கள் முடிவு செய்ததாக தெரிகிறது. மாணவியின் அம்மா, அப்பா இருவருக்கே பார்வைக் குறைபாடு எனத் தெரிகிறது. இதற்கிடையே காதலனால் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். ஆனால் இந்த விவரத்தை வீட்டில் உள்ளவர்களிடம் மறைத்து வந்துள்ளார் அந்த மாணவி. மேலும் தன்னுடைய அறையை விட்டு வெளியவே செல்லாமலும் சமாளித்து வந்துள்ளார்.
>> தாய் வீட்டுக்குச் செல்ல மறுத்த கணவர்: 7 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை!
இந்நிலையில் கடந்த 20ம் தேதி மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. யார் உதவியுமே இல்லாமல் மாணவி குழந்தை பெற்றெடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். யூடியூபில் பிரசவ வீடியோவை பார்த்து குழந்தையை பெற்றெடுத்துள்ளார் அந்த மாணவி. வீட்டில் குழந்தை சத்தம் கேட்டே மாணவியின் பெற்றோருக்கும் இந்த விவரம் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடனடியாக மாணவியும், பிறந்த சிசுவும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தாயும், சேயும் நலமாக உள்ள நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையே காதலனான 21வயது இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.
>> கட்டுமான பொருட்கள் விலை ஏற்றம்: சுடுகாட்டில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்த ஒப்பந்தகாரர்!
இது காதல் விவகாரமாக இருந்தாலும், மாணவிக்கு 17 வயது என்பதால் இது பாலியல் வன்கொடுமை என்ற புகாரின் அடிப்படையிலேயே அணுகப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவியின் பெற்றோருக்கு உண்மையிலேயே இந்த விவகாரம் தெரியாதா? அல்லது வழக்கிலிருந்து தப்பிக்க பொய் கூறுகிறார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிக்கு உடன் பிறந்த சகோதரிகள் இருவர். ஒருவருக்கு திருமணமாகிவிட்ட நிலையில், மாணவியின் தங்கை காப்பகத்தில் தங்கி இருப்பதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்