சென்னை தாம்பரம் இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன். 33 வயதான இவர், கட்டுமான ஒப்பந்தகாரர் பணி மேற்கொண்டு வருகிறார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் 28 வயதான் திவ்யபாரதி என்ற பெண்ணை திருமணம் செய்தார். பல இடங்களில் மஞ்சுநாதனின் கட்டுமானப்பணி நடந்து வந்துள்ளது. மணல், ஜல்லி, செங்கல், சிமெண்ட் என கட்டுமானப் பொருட்களில் விலை ஏற்றத்தால் கடந்த ஓராண்டாகவே தொழிலில் கடுமையான பாதிப்பை மஞ்சுநாதன் சந்தித்து வந்துள்ளார்.
விலை ஏற்றத்தால் கட்டுமானப்பணி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு கீழ் பணியாற்று பணியாளர்களுக்கு ஊதியம் கூட வழங்க முடியவில்லை என்றும், எடுத்த ஒப்பந்தத்தை விட கூடுதல் செலவாகி நஷ்டம் ஏற்படுவதாகவும் மனைவி மற்றும் உறவினர்களிடம் அடிக்கடி கூறி புலம்பி வந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம் போல பணிக்கு புறப்பட்ட மஞ்சுநாதன், இரவு ஆகும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி , குடும்பத்தாரிடம் விசயத்தை கூறியுள்ளார். பின்னர் அது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து சேலையூர் அருகே மப்பேடு பகுதியில் கட்டுமானப்பணி நடந்ததை அறிந்து அங்கு புறப்பட்டுச் சென்ற குடும்பத்தாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மஞ்சுநாதனின் பைக் மட்டும் தனியாக நின்றுள்ளது. அங்குள்ள பகுதி முழுக்க சுற்றிப் பார்த்தும் அவரை காணவில்லை. பின்னர் அருகில் உள்ள பகுதிகளில் தேடிப்பார்த்த போது, சுடுகாடு ஒன்றில் கழுத்தறுபட்ட நிலையில் மஞ்சுநாதன் சடலாக கிடந்தார். அருகிலேயே காகிதங்களை அறுக்கும் சிறிய கத்தியும் கிடந்தது. உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு விரைந்து வந்த சேலையூர் போலீசார் மஞ்சுநாதன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் தொழில் நஷ்டம் காரணமாக மஞ்சுநாதன் தற்கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அவரை சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், உடற்கூறாய்வு முடிவுக்காக காத்திருக்கின்றனர். கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தா் ஒப்பந்தகாரர், தனது கழுத்தை தானே அறுத்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்: Helplines Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours) State suicide prevention helpline – 104 (24 hours),iCall Pychosocial helpline – 022-25521111
இன்றைய முக்கியச் செய்திகள் சில...
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்