நேற்று (ஜனவரி 2, 2023) உணவு டெலிவரி நிறுவனமான Zomato-வின் இணை நிறுவனரும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான (CTO) குஞ்சன் பட்டிதார் ராஜினாமா செய்துள்ளார்.


பட்டிதார் ராஜினாமா


Zomato நிறுவனம் தொடங்கியபோது இருந்த ஆரம்பகால ஊழியர்களில் பட்டிதாரும் ஒருவர். அவர் நிறுவனத்திற்கான முக்கிய தொழில்நுட்ப அமைப்புகளை உருவாக்கினார். கடந்த பத்து-க்கும் மேற்பட்ட ஆண்டுகளில், அவர் ஒரு தொழில்நுட்பத் தலைமைக் குழுவையும் உருவாக்கினார் என்று Zomato பங்குச் சந்தைத் தாக்கல் ஒன்றில் தெரிவித்துள்ளது. அவரது LinkedIn சுயவிவரத்தின்படி, Zomato இன் ஆரம்பகால ஊழியர்களில் ஒருவரான பட்டிதார் நிறுவனத்தில் 14 ஆண்டுகள் பணிபுரிந்ததாக தெரிகிறது. மேலும் அவர் Zomato CEO தீபிந்தர் கோயலுடன் டெல்லி ஐஐடி-யில் ஒன்றாக படித்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது.



ஜோமேட்டோவில் தொடரும் விலகல்கள்


இணை நிறுவனர் மோஹித் குப்தா நிறுவனத்தை விட்டு வெளியேறிய சில வாரங்களுக்குப் பிறகு படிதாரின் ராஜினாமா செய்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. Zomatoவின் புதிய முயற்சிகளின் தலைவரும் முன்னாள் உணவு விநியோகத் தலைவருமான ராகுல் கஞ்சூ மற்றும் அதன் இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ் சேவையின் தலைவரான சித்தார்த் ஜாவர் ஆகியோரும் நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்: Gayathri raguramm: “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; அண்ணாமலையே காரணம்” - பாஜகவில் இருந்து அதிரடியாக விலகி புகார்களை அடுக்கிய காயத்ரி!


2018இல் இருந்து


நவம்பர் 2022 இல் ஐந்தாண்டு காலம் வேலை செய்த பிறகு கஞ்சூ ராஜினாமா செய்தார். adtech unicorn Moloco இன் இந்தியா செயல்பாடுகளை இயக்குவதற்காக ஜாவர் நவம்பரில் வெளியேறினார். பங்கஜ் சத்தா, கௌரவ் குப்தா மற்றும் மோஹித் குப்தா ஆகியோரைத் தொடர்ந்து நிறுவனத்திலிருந்து வெளியேறும் நான்காவது இணை நிறுவனர் இவர். சத்தா 2018லும், கௌரவ் குப்தா 2021லும் வெளியேறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



பங்கு வீழ்ச்சி காரணாமா?


தொழில்நுட்ப பங்குகளின் வீழ்ச்சிக்கு மத்தியில், உணவு டெலிவரி நிறுவனம் 2022 இல் பொது சந்தையில் பாதிக்கப்பட்டது, ஏனெனில் அதன் பங்கு விலை பிஎஸ்இயில் அதன் உச்சமான ரூ.162 இல் இருந்து 50 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. திங்கட்கிழமை பங்கு விலை ரூ.60.30 ஆக இருந்தது. நிதியாண்டு 2023 இன் இரண்டாம் காலாண்டில் (Q2FY23), Zomato இன் நிகர இழப்பு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ. 434.9 கோடியிலிருந்து ரூ.250.8 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் செயல்பாடுகளின் வருவாய் 62.20 சதவீதம் அதிகரித்து ரூ.1,661.3 கோடியாக உள்ளது. Zomatoவின் உணவு விநியோக வணிகம் அளவு அதிகரித்துள்ளதால் அதன் வளர்ச்சி குறைந்துள்ளது. Q2FY23 இல் அதன் காலாண்டு விற்பனையை ஒப்பிடுகையில், நிதியாண்டு 2022 இரண்டாம் காலாண்டை (Q2FY22) விட 22 சதவீதம் அதிகரித்து, ரூ.5,410 கோடியிலிருந்து ரூ.6,631 கோடியாக உயர்ந்துள்ளது. செப்டம்பர் 30, 2022 இல் முடிவடைந்த காலாண்டில், உணவு விநியோக வணிகத்திற்கான மொத்த ஆர்டர் மதிப்பு (GOV) வளர்ச்சியானது காலாண்டில் 3 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும்(QoQ), ஆண்டு வளர்ச்சி (YoY) 23 சதவீதம் என்றும் Zomato தெரிவித்துள்ளது.