எஸ் பேங்க் பங்குகளை விற்பனை செய்யப்பட்ட உள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என எஸ் பேங்க் விளக்கம் அளித்துள்ளது. 


எஸ் பேங்க்:


பாரத ஸ்டேட் வங்கி எஸ் பேங்கின் ரூ.5,000 - 7,000 கோடி மதிப்பிலான பங்குகள் ப்லாக டீல் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. எஸ் பேங்க் பங்கின் மதிப்பு கடுமையாக சரிவுடன் வர்த்தகமானது.  எஸ் பேங்க்-ன் 26.13% பங்குகள் பாரத ஸ்டேட் வங்கியிடம் உள்ளது. இது ரூ.22 ஆயிரத்து 900 கோடி மதிப்பு. பாரத ஸ்டேட் வங்கியிடம் உள்ள இந்த பங்கு மதிப்பின் காரணத்தால் பொதுத்துறை வங்கி பென்சன் உள்ளிட்டவைகளை கடந்த டிசம்பர் மாதம் எஸ்.பி.ஐ. வங்கி வழங்க உதவியாக இருந்தது.


எஸ் பேங் வங்கியில் பங்குகளை அதிகரிக்க ஹெச்.டி.எஃப்.சி. வங்கிக்கு மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருந்தது. ஏற்கனவே அவர்களிடம் 3% இருந்தது. புதிதாக ரூ.5,747.20 கோடி மதிப்பிலாமல் 6.5% பங்குகளை வாங்க ஹெச்.டி.எஃப்.சி. முடிவு செய்திருந்தது. இந்த அறிவிப்புகளால் வர்த்தக நேரத்தில் எஸ் வங்கியின் பங்கு மதிப்பு ரூ.29.74 ஆக இருந்தது. 0.30 குறைந்தது.


பங்குச்சந்தை:


எஸ் வங்கி அளித்த விளக்கத்தை தொடர்ந்து அதன் பங்குகளின் மதிப்பு 10% அதிகரித்தது. 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு இது உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தை வர்த்தகத்தை தொடங்கிய நேரத்தில் 200 புள்ளிகள் சரிவுடன் இருந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 220.30 அல்லது 0.31 % புள்ளிகள் குறைந்து 71,88.31 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 97.90 அல்லது 0.45% சரிந்து  21,834.45 ஆக வர்த்தகமாகியது.


வர்த்த நேர முடிவில்,மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 723.57 அல்லது 1.00%  புள்ளிகள் குறைந்து 71,428.43 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 212.55 அல்லது 0.97% சரிந்து  21,717.95 ஆக வர்த்தகமாகியது.


லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..


பாரத ஸ்டேட் வங்கி, பவர்கிரிட் கார்ப், பி.பி.சி.எல்., ஹிண்டால்கோ, கோல் இந்தியா, டி.சி.எஸ்., அப்பல்லோ மருத்துவமனை, பஜாஜ் ஆட்டோ, பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ், ஓ.என்.ஜி.சி, சன் பார்மா. என்.டி.பி.சி.’ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின. 


நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..


பிரிட்டானியா, ஐ.டி.சி., கோடாக் மகிந்திரா, ஐ.சி.ஐ.சி.ஐ. ஆக்சிஸ் வங்கி, நெஸ்லே, க்ரேசியம், இந்தஸ்லேண்ட் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி., பஜாஜ் ஃபினான்ஸ், ஆதானி எண்டர்பிரைசிஸ்,மாருதி சுசூகி, லார்சன், ஏசியன் பெயிண்ட்ஸ்,சிப்ளா, டிவிஸ் லேப்ஸ், டாடா மோட்டர்ஸ், அதானி போர்ட்ஸ், டைட்டன் கம்பெனி, டெக் மஹிந்திடா, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ்,இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.


பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளின் விலை ரூ.25 உயர்ந்தது. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.-யின் பங்கு மதிப்பு ரூ.67.55 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டது.  ஒரு பங்கின் விலை ரூ.1,112 ஆக உள்ளது.