அம்பானியை முந்துகிறாரா அதானி? கிடுகிடு வளர்ச்சியில் சொத்து மதிப்பு; வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?

அதானியின் நிறுவனங்களின் ஷேர் கடுமையாக உயர்ந்து வருவதால் இந்த வருடம் மட்டும் $54 பில்லியன் சொத்து உயர்ந்திருக்கிறது, அம்பானியை முந்தி இந்தியாவின் பணக்காரர் ஆவாரா என்ற கேள்வி எழுகிறது.

Continues below advertisement

இந்தியாவின் செல்வமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, நீண்ட காலமாக பணக்கார இந்தியர்களில் முதல் இடத்தில் உள்ளார். 2015 ஆம் ஆண்டில், சன் ஃபார்மாவின் உரிமையாளரான திலீப் ஷாங்வி, அம்பானியை சிறிது நாட்கள் பின்னுக்கு தள்ளி இருந்தார், ஆனால் ஜூன் 2015 முதல், மீண்டும் அம்பானி பணக்கார இந்தியர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார். அதற்கு பிறகு இப்போது வரை அம்பானிதான் முதல் இடத்தில் இருந்து வருகிறார். இந்திய தொலைத்தொடர்பு துறையில் புரட்சியைக் கொண்டு வந்த ரிலையன்ஸ் ஜியோவின் தொடக்கத்திற்குப் பிறகு தனது நிலையை மேலும் உறுதிப்படுத்தினார். இருப்பினும், அவருக்கு இப்போது ஒரு சவால் இருப்பதாக தெரிகிறது. அதானி குழுமத்தின் தலைவரும், இரண்டாவது பணக்கார இந்தியருமான கௌதம் அதானி, அதானி டிரான்ஸ்மிஷன் கடந்த ஓராண்டில் 400% உயர்ந்துள்ளது, அதானி எண்டர்பிரைசஸ் 333% உயர்வு போன்ற அதன் குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு அதிகரித்து வருவதால், அம்பானியை நெருங்கியுள்ளார். கடந்த ஒரு வருடத்தில் அதானி பவர் நவம்பர் 2020 முதல் 170%, அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் கடந்த ஒரு வருடத்தில் 93% அதிகரித்தது போன்றவை அதானியை மேலும் முன்னுக்கு கொண்டுவந்துள்ளது.

Continues below advertisement

வெள்ளிக்கிழமை (நவம்பர் 19, 2021) நிலவரப்படி, ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின்படி அதானியின் மொத்தச் சொத்து $87.4 பில்லியன் ஆகும், இது முகேஷ் அம்பானியை விட $7 பில்லியன் அல்லது 8% குறைவாகும், அவருடைய மொத்தச் சொத்து $94.5 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில், RIL பங்கு விலை அக்டோபர் மாதத்தில் 2,751.35 ரூபாய் என்ற சாதனையை எட்டிய பிறகு 8% சரிந்துள்ளது, இது அம்பானியின் செல்வம் குறைந்ததற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அம்பானி இப்போது உலகின் 12 வது பணக்காரர், அதே சமயம் அதானி ப்ளூம்பெர்க் உலகின் சிறந்த பில்லியனர்கள் தரவரிசையில் 13 வது இடத்தில் உள்ளார். இந்த ஆண்டில் இதுவரை, அம்பானியின் சொத்து கிட்டத்தட்ட $18 பில்லியனுக்கும் குறைவாகவே உயர்ந்துள்ளது, அதேசமயம் கௌதம் அதானியின் சொத்து $54 பில்லியன் உயர்ந்துள்ளது. அப்படியானால், அதானி 8% செல்வ இடைவெளியைக் குறைத்து அம்பானியை நெருங்கியுள்ளார். அம்பானியை முதல் இடத்தில் இருந்து இறக்க முடியுமா என்ற கேள்விக்கு வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள் ஆய்வாளர்கள். குறுகிய காலத்தில், RIL பங்குகள் ரூ.2,400க்கு கீழே உடைவதை ஆய்வாளர்கள் காணவில்லை, இது அதன் முந்தைய இறுதி விலையான ரூ.2,473ல் இருந்து வெறும் 3% மட்டுமே உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் ஆகிய இரண்டு முக்கிய வளர்ச்சி என்ஜின்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நீண்ட கால மற்றும் எதிர்கால வாய்ப்புகள் நன்றாகவே இருக்கின்றன. இந்தியாவின் மிகப்பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல், புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஜியோ தனது வாடிக்கையாளர் தளத்தை தொடர்ந்து விரிவுபடுத்தும் அதே வேளையில், கையகப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் கூகுள் இணைந்து உருவாக்கிய ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோரிடமிருந்து ஊக்கமளிக்கும் பதில்களைப் பெற்றுள்ளது. ஜியோபோன் நெக்ஸ்ட் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், நிறுவனம் 500 மில்லியன் பயனர்களை இலக்காகக் கொண்டுள்ளது. செப்டம்பர் 30, 2021 நிலவரப்படி, நிறுவனம் 429.5 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் ஆகியவற்றின் உண்மையான மதிப்பு, அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் எதிர்பார்க்கப்படும் ஆரம்ப பொதுப் பங்குகளை நிறுவனங்கள் கொண்டு வரும்போது திறக்கப்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு தொற்றுநோய் காலத்தின்போது, ​​​​ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இரண்டு துணை நிறுவனங்களும் கூகிள் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து ஒட்டுமொத்தமாக ரூ.2 லட்சம் கோடியை திரட்டியுள்ளன. அப்போது, ​​ஜியோ பிளாட்ஃபார்ம்களின் மதிப்பு ரூ.4.36 லட்சம் கோடியாகவும், ரிலையன்ஸ் ரீடெய்ல் மதிப்பு ரூ.4.6 லட்சம் கோடியாகவும் இருந்தது. பல்வேறு தரகு நிறுவனங்களின் கருத்துப்படி, அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த மதிப்பீடுகள் கிட்டத்தட்ட இருமடங்காகும், இது அம்பானியின் செல்வத்திற்கு பெரும் ஊக்கமளிக்கும். எனவே, எதிர்காலத்தில் அதானி அம்பானியை முந்தி பணக்கார கோடீஸ்வரராக இருந்தாலும், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் ஆகியவற்றின் உண்மையான மதிப்பு இன்னும் திறக்கப்படாததால், அவர் நீண்ட காலம் முதலிடத்தில் நீடிக்க வாய்ப்பில்லை.

Continues below advertisement
Sponsored Links by Taboola