சினிமாவில் தனக்கென தனி முத்திரையை பதித்திருக்கும் அஜித், சினிமாவில் நடிப்போது சரி. இசை வெளியீடு, தொகைக்காட்சி நிகழ்ச்சிகள், பட விளம்பரங்கள் எதற்கும் தலையை காட்டமாட்டார். ஆனால் அவருக்கான வரவேற்பு துளியளவும் குறையாத நிலையில் அது குறைகூற முடியாத வழக்கமாகவும் உள்ளது. சினிமா என்பதைக் கடந்து அஜித், தனக்கு பிடித்தமான வேலைகளில் ஆர்வமாக ஈடுபடுபவர். சினிமாவில் நடிப்பதை தன் தொழிலாக கருதும் அஜித், ஓய்வு நேரங்களில் குடும்பத்துடனும், தனக்கு பிடித்ததையும் செய்து வருகிறார். புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்ட அஜித், தன்னுடன் நடித்த சக கலைஞர்களை விதவிதமாக புகைப்படம் எடுத்து அவர்களை மகிழ்வித்தார்.
ஏரோனாடிக்ஸில் ஆர்வம் கொண்ட அஜித், அந்தப் பாடம் தொடர்பான மாணவர்களுடன் சேர்ந்து ட்ரோன்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அத்துடன் மாணவர்களுக்கு ஆலோசகராகவும் செயல்பட்டார். இவரின் முயற்சியில் உருவான ட்ரோன்கள் கொரோனா காலத்தில் கிருமி நாசினி தெளிப்பதற்கு மிகவும் உதவிக்கரமாக இருந்தது. இப்படி பல வேலைகளில் ஆர்வம் இருக்கும் அஜித், தற்போது பைக்கில் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார். நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த ‘வலிமை’ படத்தின் சூட்டிங் முடிவடைந்த நிலையில், அஜித் பிடித்தமான பைக்கில் நாட்டின் பல இடங்களுக்கு சென்று திரும்பினார்.
தற்போது மீண்டும் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார் அஜித். சமீபத்தில் மனைவி ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் அஜித் தொடர்பான மற்றொரு வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வேட்டி விளம்பரம் ஒன்றில் சில நொடிகள் வந்து செல்கிறார் அஜித். ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மிகவும் இளைமையாக இருக்கிறார். அஜித்தின் தொடக்கக் காலத்தில் எடுக்கப்பட்ட விளம்பரம் அது என ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்