இந்திய அளவில் சில கண்டுபிடிப்புகளுக்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கி வருகிறது. அந்தவகையில் தற்போது பை ஹேப்பி மார்க்கெட்டிங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்,ராதாகிருஷ்ணன் தனது கண்டுபிடிப்பிற்காக இந்திய அரசாங்கத்திடமிருந்து காப்புரிமையைப் பெற்றுள்ளார். 


இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும், தங்கள் தலைமுடிக்கு வண்ணம் பூசும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்திய ஷாம்பூ அடிப்படையிலான முடி திரவத்தினை கண்டுபிடித்துள்ள சாதனை தமிழனாக திகழ்கிறார் ஆர் கே என அழைக்கப்படும் திரு ராதாகிருஷ்ணன்| விஐபி ஹேர் கலர் ஷாம்பு என்று பிரபலமாக அறியப்படும் இந்த கண்டுபிடிப்பு, கையுறைகள், கிண்ணம் மற்றும் பிரஷ் இல்லாமல் முடியை வண்ணமயமாக்கும் செயல்முறையை எளிதாக்கியுள்ளது. இப்போது, குளிக்கும்போது உங்கள் தலையில் ஷாம்பூவைப் பயன்படுத்துவதுபோல் உங்கள் தலைமுடிக்கு வண்ணம் பூசுவது எளிது இவரது கண்டுபிடிப்பு இத்துடன் நிற்கவில்லை திரு. ராதாகிருஷ்ணனின் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி, ஒருவர் தங்கள் தலைமுடி, மீசை, தாடி, மார்பு முடி மற்றும் உங்கள் கைகளில் முடியை வண்ணம் தீட்டலாம்.


ஆகஸ்ட் 15, 2019 அன்று நடந்த ஒரு நிகழ்வில் 1004 பேர் விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை ஒரே கூரையில் சுயமாகப் பயன்படுத்திய கின்னஸ் உலக சாதனையை வென்றபோது விஐபி ஹேர் கலர் ஷாம்பு சந்தையை அதிர வைத்தது குறிப்பிடத்தக்கது, அவர்களின் கையில் ஒட்டாமல் 100% கிரே கவரேஜ் தந்து, பலரையும் திரும்பி பார்க்க வைத்தது இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பு!




இதை பற்றி திரு ஆர் கே கூறுகையில் "எனது கண்டுபிடிப்பு, விஐபி ஹேர் கலர் ஷாம்பு இப்போது ஐந்து ஆண்டுகளாக சந்தையில் உள்ளது. இது ஒரு தனித்துவமான தயாரிப்பு. சந்தையில் பல ஹேர் கலரிங் பொருட்கள் உள்ளன, ஆனால் ஹேர் கலரைப் பயன்படுத்துவதற்கு முன்பு கையுறைகளை அணிவது அவசியம்.


கையுறைகளைப் பயன்படுத்தாமல் பயன்படுத்தக்கூடிய உலகின் ஒரே தயாரிப்பு எங்களுடையது வி ஹேர் கலர் ஷாம்பூவை கையுறைகள் கிண்ணம் அல்லது பிரஷ் இல்லாமல் முடியில் ஆண்களும் பெண்களும் ஷாம்பூவைப் போல் தடவி 100% கருப்பு வண்ண முடியினை பெறலாம்(நாங்கள் 2019 இல் கின்னஸ் விருதை வென்றோம். இப்போது, என்று கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை 20 ஆண்டுகளாக இந்திய அரசிடமிருந்து பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண