நாள்: 02.06.2022


நல்ல நேரம் :


காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை





கௌரி நல்ல நேரம் :




மதியம் 12.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை


இராகு :


காலை 7.30 மணி முதல் மதியம் 3 மணி வரை


குளிகை :


காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை


எமகண்டம் :


காலை 6 மணி முதல் காலை 7.30 மணி வரை


சூலம் –  தெற்கு


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே, உங்கள் கடின முயற்சி மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். இதன்மூலம் இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். எம்பெருமான் வழிபாடு இந்த நாளை இன்னும் சிறப்பாக்கும்.


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே, தேவையற்ற மனக்கவலை குடிகொள்ளும். விநாயகப்பெருமானை வழிபட்டு வர வேண்டும். சுற்றத்தார் மற்றும் உறவினர்களிடம் கூடுதல் கவனம் தேவை. கொடுக்கல், வாங்கலில் முன்ஜாக்கிரதை அவசியம். பொறுமை அவசியம்.


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே, வீண் பயம் மனதில் ஏற்படும். சுற்றி நடைபெறும் சம்பவங்களால் எதிர்கால பயம் உண்டாகும். இளைய சகோதர வழியில் இம்சைகள் ஏற்படும். ஆலய வழிபாடு செய்து அமைதி காணலாம். நம்பிக்கையை கைவிடக்கூடாது.


கடகம் :


கடக ராசி நேயர்களே, புதியவர்கள் நட்பு கிட்டும். இந்த நட்பு உங்கள் தொழில் வாழ்க்கைக்கு முக்கிய திருப்பு முனையாக அமையும். எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைப்பதற்கான தொடக்க நாளாக இந்த நாள் அமையும். பொன்னான நாளாக இந்த நாள் விளங்கும். 


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே, தேவையற்ற தடங்கல் உண்டாகும். தடங்கலைப் பற்றி கவலை கொள்ளாமல் முயற்சிகளை தொடருங்கள். பணிபுரியும் இடத்தில் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடக்கூடாது. பொறுமை மிக மிக நன்று. வீட்டில் உள்ளோர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.


கன்னி :


கன்னி ராசி நேயர்களே, இந்த நாள் இன்பமான நாளாக அமையும். இட மாற்ற யோகம் ஏற்படும். புதிய வீட்டிற்கு செல்லும் யோகத்தால் எதிர்பார்த்த பணி மாற்றம் ஏற்படும். மனதில் புதுவித மகிழ்ச்சி குடிகொள்ளும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாக அமையும். 


துலாம் :


துலாம் ராசி நேயர்களே, முக்கிய காரியங்களில் தேவையற்ற தாமதம் உண்டாகலாம். பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கும் விவகாரங்களில் குழப்பமான சூழல் உண்டாகலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வார்த்தைகளில் கவனம் தேவை. கடன் வசூல் சற்று தாமதமாக வாய்ப்பு உண்டு.


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே, அற்புதமான நாளாக அமையும். நேற்றைய கவலைகளுக்கு இன்று தீர்வு கிட்டும். தொலைபேசி வழித்தகவல்கள் இன்பம் அளிக்கும். எதிர்பார்த்த கடன் வசூல், பணவரவு உண்டாகும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆபரணம் வாங்கும் யோகம் உண்டு.


தனுசு :


தனுசு ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு பணவரவு உண்டாகும். எதிர்பார்க்காத உறவினர் வீட்டிற்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் உற்ற நேரத்தில் உதவுவார்கள். மனதிற்கு பிடித்தவர்களுடனான சந்திப்பு நிகழும். குடும்பத்தில் மங்கலம் உண்டாகும்.


மகரம் :


மகர ராசி நேயர்களே, தேவையற்ற சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதால் மிகவும் கவனம் தேவை. தொழிலில், வியாபாரத்தில் சற்று பொறுமை தேவை. நிதானமாக செயல்படுவதால் தேவையற்ற பண இழப்புகளை தவிர்க்கலாம். வார்த்தைகளில் கவனம் தேவை. 


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே, சகோதரி வழி சிக்கல்கள் நல்ல முறையில் முடிவுக்கு வரும், மனக்கசப்புகள் அகன்று மீண்டும் பாசம் அதிகரிக்கும். திருமணத் தடைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.


மீனம்:


மீன ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு உடனிருப்பவர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனதில் வீண் எண்ண அலைகள் உண்டாகும். அக்கம்பக்கத்தினரிடம் கூடுதல் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை ஒத்திவைப்பது நல்லது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண