சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சேலம் மாவட்ட பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார். கூட்டத்தில் அத்தியாவசியமான பொருட்களான அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களுக்கு புதிதாக விதிக்கப்பட்ட ஐந்து சதவிகித ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா கூறும்போது, “மீண்டும் இரண்டாவது முறையாக திமுக தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஜிஎஸ்டி வரியை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மாநில செஸ் வரி நீக்க வேண்டும். இன்னும் ஒரு மாத காலத்திற்குள் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். பிளாஸ்டிக் பொருட்கள் பிரச்சினையால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வியாபாரிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள். இதனால் இந்தியா முழுவதும் ஒரே முறை கையாளப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.


சேலத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக பாதாளசாக்கடை திட்டம் நடக்கிறது. இதனால் பொதுமக்களும் வியாபாரிகளும் பெரிதும் பாதிப்படைகின்றனர். அரசு துரித நடவடிக்கை எடுத்து விரைந்து முடிக்க வேண்டும். வருகிற 11 ஆம் தேதி எங்களது ஆட்சிமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஜிஎஸ்டி பிரச்சினை, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை விவாதித்து போராட்டம் நடத்துவது குறித்து கலந்தாலோசித்து தேதி அறிவிப்போம். பான்பராக், குட்கா, வைத்துள்ளனரா என அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்கின்றனர். ஏற்கனவே வியாபாரம் செய்தவராகளை காவல் துறையினர் அழைத்து சென்று துன்புறுத்துகின்றனர். அதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற அவர், சொத்து வரி, மின்கட்டன உயர்வு, பரிசீலனை செய்து பதிவு பெற்ற வியாபாரிகளுக்கு சலுகை அடிப்படையில் மின்சாரம் தர வேண்டும் என வலியுறுத்தினார்.



முன்னதாக சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை வியாபாரிகள் மல்லிகை வியாபாரிகள் சங்க பொதுக்கூட்டம் செவ்வாய்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அச்சங்கத்தின் தலைவர் நடராஜன் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடராஜன், தமிழக மீனவர்களை இலங்கை காவலர்கள் தொடர்ந்து கைது செய்வது கண்டிக்கத்தக்கதாகும். இது மட்டுமின்றி இலங்கை காவல்துறையினரால் இங்கிருந்து கொண்டு செல்லப்படும் அரிசி, பருப்பு, மிளகு, கோதுமை உள்ளிட்ட மல்லிகை பொருட்களையும் சேதப்படுத்துகின்றனர். இதேபோன்ற நிலை தொடருமானால் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் மளிகை பொருட்கள் முழுமையாக இங்கேயே நிறுத்தப்படும் என எச்சரித்தால். மேலும் ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி உயர்வு நாள் மக்கள் அன்றாட பயன்படுத்தக்கூடிய சோப்பு ஷாம்புகளின் விற்பனையும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த கூட்டத்தில் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள மளிகை கடை உரிமையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.