பிக்பாஸ் சீசன் ஒவ்வொரு முறையும் புதிதாகத் தொடங்குவது மக்களுக்கான மார்கழி மாதக் கொண்டாட்டம்தான். மற்றொருபக்கம் அதுகுறித்த சர்ச்சைகளுக்கும் சற்றும் குறைவில்லை. அந்த வகையில் இந்த வருடம் பாலிவுட்டில் நிகழும் பிக்பாஸில் பங்கேற்பாளர்களில் ஒருவரான சஜீத் கான் குறித்து சர்ச்சை வெடித்துள்ளது. சஜித் கான் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்தே தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். இப்போது, முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான உர்ஃபி ஜாவேத் இதுபற்றிக் கூறுகையில் ”தான் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டிய எந்தவொரு பெண்ணிடமும் மன்னிப்பு கேட்கவில்லை” என்று சாஜித் குறித்து சாடியுள்ளார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், பிக் பாஸ் 16 போட்டியாளர் சஜித் கான் மீதான மீடூ குற்றச்சாட்டுகளை உர்ஃபி நெட்டிசன்களுக்கு நினைவூட்டினார்.
ஒரு வீடியோவில், "சஜித் கான் தான் துன்புறுத்திய தனக்கு இரையாக்கிய அல்லது ஏதோ வகையில் பாதித்த எந்தவொரு பெண்ணிடமும் மன்னிப்பு கேட்கவில்லை என்பதை உங்கள் அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன், அவர் தேசத்திடம் மன்னிப்பு கூட கேட்கவில்லை. மறுபுறம், அவர் தனது செயல்கள் குறித்து தன்னைத் தற்காத்து வருகிறார்.
அதற்காக அவர் வருத்தப்படவில்லை, ஆனால் அவர் செய்ததை தொடர்ந்து நியாயப்படுத்தி வருகிறார். என்ன ஒரு இழிவான நபர்" என உர்ஃபி தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 2 ஆம் தேதி சல்மான் கானின் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் 16ல் போட்டியாளராக நுழைந்த சஜித் கான் இணையத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பினார். சஜித் கானுக்கு எதிராக பல மீடூ புகார்கள் ஆன்லைனில் வெளிவந்ததால் சர்ச்சையில் சிக்கினார். தியா மிர்சா, லாரா தத்தா மற்றும் பிபாஷா பாசு போன்ற பல முன்னணி நடிகைகளும் திரைப்பட சூட்டிங் ஸ்பாட்களில் தனது பெண் சகாக்களிடம் தவறாக நடந்து கொண்டதற்காக சஜித்கான் மீது குற்றம்சாட்டினர்.