உங்கள் அன்பான குடும்பத்தின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும்போது, முதலில் ஆயுள் காப்பீடுதான் கண் முன்வந்து நிற்கும். துர்வாய்ப்பாக இறப்பு  ஏதேனும் நிகழும்போது, உங்களின் குடும்பத்தைப் பொருளாதார ரீதியாக நிலையாக வைக்க, ஆயுள் காப்பீடுதான் உதவுகிறது. 


நடைமுறையில் ஏராளமான ஆயுள் காப்பீடுகள் அமலில் உள்ள சூழலில், 2 பிரபலமான காப்பீடுகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை, Traditional Life Insurance எனப்படும் பாரம்பரிய ஆயுள் காப்பீடு மற்றும் Term Life Insurance எனப்படும் டெர்ம் ஆயுள் காப்பீடு.    


இரண்டு காப்பீடுகளும் அதற்கே உரிய அம்சங்கள் மற்றும் பலன்களைக் கொண்டிருந்தாலும் வெவ்வேறு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இதுகுறித்துப் பார்க்கலாம்.


பாரம்பரிய ஆயுள் காப்பீடு: ஒரு சுருக்கமான பார்வை


பாரம்பரிய ஆயுள் காப்பீடு பொதுவாக ஆயுட்கால காப்பீடு என்று அழைக்கப்படுகிறது. இது வழக்கமான காப்பீட்டோடு, எதிர்காலத்துக்கான சேமிப்பையும் முதன்மையாகக் கொண்டிருக்கிறது. இந்த காப்பீட்டில், குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ப்ரீமியமாகச் செலுத்துவீர்கள். அதில் ஒரு குறிப்பிட்ட தொகை, காப்பீட்டுக்காக ஒதுக்கப்படும். மீதமுள்ள தொகை, மாதாமாதம் வரவு வைக்கப்படும். இந்தப் பணம் ஆண்டுக்கணக்கில் சேர்ந்து, இறுதியில் மிகப்பெரிய தொகையை அளிக்கும். 


டெர்ம் ஆயுள் காப்பீடு: ஒரு சுருக்கமான பார்வை


டெர்ம் ஆயுள் காப்பீடு முற்றிலும் காப்பீட்டை நேரடியாக அணுகும் ஒரு காப்பீடாகும். காப்பீட்டின் காலகட்டத்தில் நமக்கு ஏதேனும் நேர்ந்தால் காப்பீட்டுத் தொகை குடும்பத்துக்கு வழங்கப்படும். இந்த வகை காப்பீடுகள் பணத்தை சேமித்து, இறுதியில் வழங்குவதில்லை. இதனால் நாம் செலுத்த வேண்டிய ப்ரீமியம் தொகை, பாரம்பரியக் காப்பீட்டின் ப்ரீமியத்தை விடக் குறைவாகவே இருக்கும். இதனால், சேமிப்பு தவிர்த்து காப்பீட்டுக்காக மட்டுமே ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை நாடுபவர்கள், அதிகமாக இந்தத் திட்டத்தை விரும்புகின்றனர். 


உங்களுக்கு எந்தக் காப்பீடு சரியாக இருக்கும்?


பாரம்பரிய ஆயுள் காப்பீடு அல்லது டெர்ம் ஆயுள் காப்பீட்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்வது உங்களின் தற்போதைய வாழ்க்கை நிலை மற்றும் நிதி இலக்குகளைப் பொறுத்தே இருக்க வேண்டும். வெவ்வேறு சூழலில், எந்தக் காப்பீடு சரியாக இருக்கும் என்பதை பின்வரும் தெரிவுகளை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யலாம். 


இளம் ஊழியர்கள் மற்றும் குடும்பங்கள் 


தங்களுடைய கேரியரின் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்கள் அல்லது இளம் குடும்பங்களைக் கொண்டிருப்பவர்களுக்கு டெர்ம் ஆயுள் காப்பீடு சரியான ஒன்றாக இருக்கும். ஏனெனில் இதுதான் எதிர்பாராத சூழ்நிலைகளில், குறைவான ப்ரீமியம் தொகையில் அதிகபட்சப் பாதுகாப்பை உங்களின் குடும்பத்துக்கு வழங்கும். இந்த காலகட்டத்தில், திருமணம், குழந்தைகள், கல்வி செலவுகள் என நிதிசார் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். இந்த வகை காப்பீடுகள், உங்களின் பட்ஜெட்டில் துண்டு விழாதவாறு குறைவான ப்ரீமியம் தொகையையே எடுத்துக் கொள்ளும். 


நடுத்தர வயது மற்றும் ஓய்வுக்கால திட்டமிடல்


உங்களின் கேரியரில் அடுத்தகட்டத்துக்கு உயர்ந்து, நிதி நிலையும் மேம்பட்டிருந்தால், பாரம்பரிய ஆயுள் காப்பீடு சரியான தேர்வாக இருக்கும். ஏனெனில் இதில் காப்பீட்டோடு, இறுதியாக சேமிப்புத் தொகையும் கிடைக்கும். சேமிக்கப்பட்ட பணம் கடைசியில், ஓய்வுக்கால வருமானம், அன்றாட செலவுகள், வேறு ஏதேனும் முக்கிய நிகழ்வுகளுக்குப் பயன்படக்கூடிய தொகையாக மாறும்.


ஹெச்டிஎஃப்சி லைஃப் க்ளிக் 2 ப்ரொடெக்ட் சூப்பர் (HDFC Life Click 2 Protect Super)


டெர்ம் ஆயுள் காப்பீட்டை நீங்கள் தேர்வு செய்ய முடிவு செய்தால், ஹெச்டிஎஃப்சி லைஃப் க்ளிக் 2 ப்ரொட்டெக்ட் சூப்பர் திட்டம் சிறப்பான தேர்வாக இருக்கும். இந்த காப்பீட்டுத் திட்டம் விருப்பத்துக்கேற்ற கவரேஜ், பாலிசி டெர்ம்களை நாமே முடிவு செய்யும் இலகுத்தன்மை (Flexibility) உள்ளிட்ட ஏராளமான பயன்களைக் கொண்டிருக்கிறது. 


அதேபோல பெண் ஊழியர்கள், தங்களின் குடும்பங்களைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கை இந்தக் காப்பீடு அளிக்கிறது. அதாவது, ஹெச்டிஎஃப்சி லைஃப் க்ளிக் 2 ப்ரொட்டெக்ட் சூப்பர் (HDFC Life Click 2 Protect Super) காப்பீட்டைத் தேர்வு செய்யும் பெண்களுக்கு 15 சதவீத பிரத்யேகத் தள்ளுபடி (discount to women)வழங்கப்பட உள்ளது.  


ஒவ்வொருவரின் தனித்தனி நிதி நிலை, குடும்ப சூழல், தேவைகள் ஆகியவற்றைப் பொறுத்து, பாரம்பரிய ஆயுள் காப்பீடா அல்லது டெர்ம் ஆயுள் காப்பீடா என்று முடிவு செய்யலாம். ஹெச்டிஎஃப்சி லைஃப் க்ளிக் 2 ப்ரொட்டெக்ட் சூப்பர் காப்பீடு பெண்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை அளித்து, அவர்களின் பல்வேறு நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ஹெச்டிஎஃப்சி லைஃப் க்ளிக் 2 ப்ரொட்டெக்ட் சூப்பர் திட்டம் குறித்து மேலும் தகவல் பெற, ஹெச்டிஎஃப்சி லைஃப் இணையதளத்தை க்ளிக் செய்ய வேண்டும். ஹெச்டிஎஃப்சி லைஃப் நிபுணர்களிடமும் இதுகுறித்துப் பேசலாம். 


இறுதியாக... இதில் எது உங்களின் தேர்வாக இருந்தாலும் சரி, ஆயுள் காப்பீட்டில் முதலீடு செய்வது என்பது உங்கள் அன்புக்குரியவர்களின் நிதிப் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் என்பதை மறக்காதீர்கள்.


பொறுப்பு துறப்பு:


இது, கட்டணம் வாங்கிகொண்டு வெளியிடப்பட்ட கட்டுரையாகும். இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை ABP குழுமம் ஆதரிக்கவில்லை. மேற்கூறிய கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், அறிவிப்புகள், பிரகடனங்கள், உறுதிமொழிகள், கூறப்பட்ட/சிறப்பிடப்பட்டவை போன்றவற்றிற்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டோம். கூறப்பட்ட கட்டுரையில். அதன்படி, பார்வையாளர்கள் கவனமாக முடிவுகளை எடுக்க அறிவுறுத்துகிறோம்.