சென்னையில் ஆபரணத்தங்கம் 22 காரட் கிராமிற்கு ரூபாய் 4887க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 39096க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் ஒரு கிராம் தங்கம் இன்று ரூபாய் 8 குறைந்து ரூபாய் 4879க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 64 குறைந்து ரூபாய் 39032க்கு விற்கப்படுகிறது.


24 காரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 5278க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 42224க்கு விற்கப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு ரூபாய் 70.00க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 70000க்கு விற்கப்படுகிறது.







பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும். அந்த வகையில் உக்ரைன் போர் காரணமாக தொடர்ந்து பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. அதனால்  தங்கத்தின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.





ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக தங்கத்தில் முதலீடு செய்வது கடுமையாக உயர்ந்துள்ளது.  தற்போதுவரை, உக்ரைனில் போர் குறைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. கடுமையான ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் தடைகள் ஆகியவை பங்குச் சந்தையை கடுமையாக பாதிக்கிறது. எண்ணெய் விலை 14-ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பாட் வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 1.7% அதிகரித்து 26.09 டாலராகவும், பிளாட்டினம் 2.3% உயர்ந்து 1,147.19 டாலராகவும் இருந்தது.

 

அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைன் இணைய விரும்புகிறது. ஆனால் அதை ரஷ்யா விரும்பவில்லை. எனவே ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கும் வகையில் போரை முன்னெடுத்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர்  இரண்டு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் ரஷ்யாவிடம் சரணடையும்வரை போரைக் கைவிடும் திட்டம் இல்லை என்பதே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் முடிவாக இருக்கிறது.












இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண