தஞ்சை அருகே தேர் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கான காரணம் மின்சார கம்பிகள் முறையாக மாற்றி அமைக்கப்படாததே என அக்கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த 11 பேரின் விவரம் வெளியாகியுள்ளது. 2 சிறுவர்கள் உட்பட 11 பேரின் விவரம்..


இறந்தவர்கள்..


1.மோகன் (22)
2.பிரதாப் (36)
3.ராகவன் (24)
4.அன்பழகன் (60)
5.நாகராஜ் (60)
6.சந்தோஷ் (15)
7.செல்வம் (56)
8.ராஜ்குமார் (14)
9.சாமிநாதன் (56)
10.கோவிந்தராஜ்
11.பரணி (13)


காயமடைந்தவர்கள்



1)ரவிச்சந்திரன்48/22
S/o மாரிஐயா


2) கலியமூர்த்தி40/22,
S/o. ராமையா


3) ஹரிஸ்ராம் 10/22,
S/oகலியமூர்த்தி,


4) சுகுந்தா 33/22
W/o மதன்


5) நீத்திஸ்ராம் 13/22
S/o. மதன்


6) மாதவன் 22/22
S/o அன்பழகன்


7) மோகன் 54/22
S/o தங்கவேல்


8)  விஜய் 23/22
S/o நக்கீரன்


9) அரசு 19/22,
S/o  மெய்யழகு


10) விக்கி 21/22
S/o கோவிந்தராஜ்


11) திருஞானம் 36/22
S/o கலியபெருமாள்


12) ஹரி 14/22
S/o வெங்கடேசன்


கவலைக்கிடம்..


1) கௌசிக் 13/22
S/o பிரகாஷ்


தஞ்சாவூரில் தேரோட்டத்தின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்தனர். தேர் திருவிழா நிறைவடைந்து, அப்பர் கோயிலுக்கு திரும்பும்போது உயர் மின்சார கம்பியில் தேர் உரசியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 11 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் மின்சார கம்பிகள் முறையாக மாற்றி அமைக்கப்படாததே தேர் விபத்துக்கு காரணம் என அக்கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது குறித்து தெரிவித்த இளைஞர் ஒருவர், '' கடந்த வருடம் வரை சாலை குறுகலாகவே இருக்கும். உயர் அழுத்த மின் கம்பி சாலையில் ஓரத்தில் இருக்கும். கோயில் நிர்வாகமும் சரியாக சாலையில் தேரை இழுத்துச் செல்வார்கள்.


இந்த வருடம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் மின்சார கம்பியை மட்டும் அப்படியே விட்டுவிட்டார்கள். இதனால் மின்கம்பி சாலையில் நடுவே செல்வதாகவே இருந்தது. இதனைக் கவனிக்காமல் தேரை விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையில் திருப்பும்போது மின்கம்பியின் உரசி விபத்து ஏற்பட்டது. மின் கம்பியை சாலை ஓரத்திலேயே மாற்றி அமைத்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது என்றார்.


இதற்கிடையே, தேர் திருவிழாவின் போது தேரை சுற்றி தண்ணீர் தேங்கி இருந்ததாகவும் அதனால் 50 க்கும் மேற்பட்டவர்கள் தேரைவிட்டு விலகி நின்றதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்தனர். ஒருவேளை தண்ணீர் இல்லாமல் இருந்திருந்தால் அனைவருமே தேர் அருகிலேயே இருந்திருப்பார்கள், இன்னும் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் என குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.