உலகப் புகழ்பெற்ற திருப்பதி பெருமாள் கோயில், விப்ரோ, நெஸ்லே, ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்களை வசதியில் பின்னுக்குத் தள்ளியது திருப்பதி பெருமாள் கோயில்.


திருப்பதி கோயில் சொத்துகளில் வங்கிகளில் மட்டும் 10.25 டன் தங்கமும்  2.5 டன் தங்க நகைகளும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, வங்கிகளில் சுமார் ரூ.16,000 கோடி டெபாசிட் மற்றும் இந்தியா முழுவதும் 960 சொத்துக்கள் திருப்பதி கோயிலுக்குச் சொந்தமாக உள்ளன.


திருப்பதி கோயிலை நிர்வகித்துவரும் திருமலா திருப்பதி தேவஸ்தானம் 1933 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்நிறுவனம் முதல் முறையாக கோயிலுக்கு இருக்கும் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளது. வங்கிகளில் 10.25 டன்கள் தங்கமும் 2.5 டன்கள் தங்க ஆபரணங்களும் பாதுகாக்கப்படுகின்றன. இதுதவிர, ரூ.16ஆயிரம் கோடி ரொக்கம் டெபாசிட் செய்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் 960 சொத்துகள் திருப்பதி கோயிலுக்குச் சொந்தமாக உள்ளன.


ஒட்டுமொத்தமாக ரூ.2.5 லட்சம் கோடிக்கும் அதிகமான சொத்துகள் திருப்பதி கோயிலுக்கு உள்ளது. பங்குச் சந்தை தரவுகளின்படி, தற்போதைய வர்த்தக விலையில், திருப்பதி கோயிலின் நிகர மதிப்பு பல புளூசிப் இந்திய நிறுவனங்களை விட அதிகமாக உள்ளது.


புகழ்பெற்ற துலா உற்சவ விழா - வதான்னேஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்


வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை முடிவில் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் விப்ரோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2.14 லட்சம் கோடியாக உள்ளது. அல்டாடெக் சிமெண்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1.99 லட்சம் கோடியாக இருக்கிறது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உணவு மற்றும் குளிர்பான தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே இந்தியாவின் சந்தை மதிப்பு ரூ.1.96 லட்சம் கோடியாக உள்ளது.


பொதுத் துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) ஆகிய நிறுவனங்கள் திருப்பதி அறக்கட்டளைக்கு உள்ள சொத்து மதிப்பை காட்டிலும் குறைவான சொத்து மதிப்பையே கொண்டிருக்கிறது.


மற்றொரு பொதுத் துறை நிறுவனமான  நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் ( NTPC), மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், உலகின் மிகப் பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட், வேதாந்தா, ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஎல்எஃப் உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்து மதிப்புகளும் திருப்பதி கோயிலின் சொத்து மதிப்பைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது.






சுமார் 24 நிறுவனங்கள் மட்டுமே கோயில் அறக்கட்டளையின் நிகர மதிப்பை விட பெரிய சந்தை மதிப்பைக் கொண்டுள்ளன. இதில் பில்லியனர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ரூ. 17.53 லட்சம் கோடி), டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (ரூ.11.76 லட்சம் கோடி), ஹெச்டிஎஃப்சி வங்கி (ரூ.8.34 லட்சம் கோடி), இன்ஃபோசிஸ் (ரூ.6.37 லட்சம் கோடி), ஐசிஐசிஐ வங்கி (ரூ.6.31 லட்சம் கோடி) ஆகியவை அடங்கும். ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (ரூ. 5.92 லட்சம் கோடி), பாரத ஸ்டேட் வங்கி (ரூ. 5.29 லட்சம் கோடி), பார்தி ஏர்டெல் (ரூ. 4.54 லட்சம் கோடி) மற்றும் ஐடிசி (ரூ. 4.38 லட்சம் கோடி) உள்ளன.


Share Market: ஏற்றத்தில் தொடங்கி ஏற்றத்தில் முடிவடைந்த இந்திய பங்குச் சந்தை..சொமேட்டோ, டாடா பங்குகள் அமோகம்!


திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு (TTD) பக்தர்கள் செலுத்தும் ரொக்கம் மற்றும் தங்க காணிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வங்கிகளில் நிலையான வைப்புகளும் அதிக வருமானத்தை ஈட்டித் தருகின்றன என்று கோயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான சொத்துக்களில் வங்கிகளில் உள்ள ரொக்கம் மற்றும் தங்கம் ஆகியவை பக்தர்கள் கோயிலுக்கு காணிக்கையாக வழங்குபவையாகும்.


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


திருப்பதி கோயிலின் உண்டியல் காணிக்கை மட்டும் சுமார் ரூ.1,000 கோடியாக இருக்கிறது. இந்தக் காணிக்கையை சுமார் 2.5 கோடி பக்தர்கள் உண்டியலில் செலுத்துகிறார்கள்.  ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, தெலங்கானா, ஒடிசா, ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் டெல்லியிலும் ஏராளமான கோயில்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.