ட்விட்டர் தளத்தில் தொடர்ந்து செயல்பட்டு வரும் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் சுமார் 65 மில்லியன் ஃபாலோவர்கள் இருக்கின்றனர். மேலும் தன் சமூக வலைத்தளங்களில் தன் ஃபாலோவர்களுடன் சரளமாக உரையாடும் வெகுசில பில்லியனர்களுள் எலான் மஸ்க்கும் ஒருவர். தன்னை ஈர்க்கும் ஒவ்வொரு விவகாரம் மீது எமோஜி, ஒரு லைன் பதிவு, மீம்கள் முதலானவற்றை அவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அது போல நிறுவனம் சார்ந்த விவகாரங்களையும் அவ்வப்போது ட்விட்டரில் தட்டிவிட்டு வைரலாவார். 






அந்த வகையில் தான் செலுத்தவுள்ள வரி குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளார் எலான். அவர் வெளியிட்ட தகவலின்படி, 11 மில்லியன் டாலர்களை வரியாக கட்டவுள்ளாராம் எலான் மஸ்க். 11மில்லியன் டாலர்கள் என்றால் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 83ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். அமெரிக்காவின் வரி வரலாற்றில் இது அதிகம் எனக் கூறப்படுகிறது. வரியே 11 பில்லியன் டாலர் என்றால் அவருடைய சொத்து மதிப்பு என்னவென்று யோசிக்கிறீர்களா? அது  243 பில்லியன் டாலர்கள். டெஸ்லா கார் நிறுவனம், SpaceX நிறுவனம் என முக்கிய நிறுவனங்களின் உரிமையாளர் எலான் மஸ்க். 




டைம் இதழின் 2021-ஆம் ஆண்டின் சிறந்த நபராக அறிவிக்கப்பட்டார் எலன் மஸ்க். 2021ம் ஆண்டு இந்திய அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலிலும் எலான் இடம்பெற்றார். சமீபத்தில் ஒற்றை ட்வீட் மூலம் பங்குச்சந்தையில் ஆட்டத்தை காண வைத்தார் எலன். 


 தனது பணியை விட்டு விலகி, முழு நேர Social media influencer ஆவதற்குச் சிந்திப்பதாகக் கூறியுள்ளார். `என் பணிகளில் இருந்து முழுவதுமாக விலகிவிட்டு, முழு நேர influence ஆகலாம் என்று நினைக்கிறேன்.. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எலான் மஸ்க். எனினும் அவரது ஃபாலோவர்களுக்கு அவர் ஏற்கனவே influencer என்பது நன்றாகத் தெரியும். ஏனெனில், அவரிடம் இருந்து வரும் ஒற்றை ட்விட்டர் பதிவே பங்குச் சந்தையில் தாக்கம் செலுத்துவதற்கும், க்ரிப்டோகரன்சியின் மதிப்பைக் கூட்டுவதற்கும், குறைப்பதற்கும் தாக்கம் செலுத்துத்துவற்கும் காரணமாக அமைந்தது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண