டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது அவசியம் என்பதே அனைத்து நிதி ஆலோசகரின் கருத்து. ஆனால் கோவிட்டுக்கு பிறகு டேர்ம் இன்ஷூரன்ஸின் அவசியம் புரிந்துவிட்டது. தற்போது டேர்ம் இன்ஷூரன்ஸி தேவை உயர்ந்துவிட்டது. ஆனால் ப்ரீமியம் உயர்வதற்கு தேவை காரணம் அல்ல. கோவிட்டுக்கு பிறகு காப்பீட்டு நிறுவனங்கள் சுமார் 11000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு வழங்கியுள்ளன. மேலும் ரீஇன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் டேர்ம் இன்ஷூரன்ஸாக தொகையை உயர்த்திவிட்டன. அதனால் டேர்ம் இன்ஷூரன்ஸ் ப்ரீமியம் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகமாகி இருக்கிறது. 


ஐசிஐசிஐ புரூடென்சியல் லைப், ஹெச்டிஎப்சி லைப், பஜாஜ் அலையன்ஸ் அதிகபட்சம் 30 சதவீதம் வரை ப்ரீமியத்தை உயர்த்தி இருப்பதாக தெரிகிறது. இதுதவிர டாடா ஏஐஜி, ஆதித்யா பிர்லா லைப் மற்றும் மேக்ஸ் லைப் உள்ளிட்ட நிறுவனங்கள் உயர்த்த இருப்பதாக தெரிகிறது. இதுதவிர மேலும் பல நிறுவனங்களும் உயர்த்த இருக்கின்றன.


சர்வதேச அளவில் இந்தியாவில்தான் டேர்ம் இன்ஷூரன்ஸ் ப்ரீமியம் குறைவு. ஆனால் கோவிட்டுக்கு முன்பு இருந்த நிலையுடன் ஒப்பிட்டால் சுமார் 50 சதவீதம் அளவுக்கு கடந்த இரு ஆண்டுகளில் ப்ரீமியம் உயர்ந்திருப்பதாக இந்த துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.


ப்ரீமியத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல் வேறும் சில கட்டுப்பாடுகளை காப்பீட்டு நிறுவனங்கள் உருவாக்கி இருப்பதாக தெரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்கள் படிக்காதவர்கள் என எந்தவித்தியாசமும் டேர்ம் இன்ஷூரன்ஸ் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது பட்டதாரிகளுக்கு மட்டுமே டேர்ம் இன்ஷூரன்ஸ் வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அதேபோல சில ஆயிரம் பின்கோடுகளுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் வழங்க வேண்டாம் என முடிவெடுத்திருப்பதாகவும் தெரிகிறது. அதேபோல டேர்ம் இன்ஷூரன்ஸ் வழங்குவதற்கு குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயம் செய்திருப்பதாக தெரிகிறது.


ஒமைக்ரான் உள்ளிட்ட புதுப்புது திரிபுகள் வந்துகொண்டிருக்கும் வேலை டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது தவிர்க்க முடியாதது. ப்ரீமியம் உயர்கிறது என்பதற்காக டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்காமல் இருப்பது நல்லது. மேலும் ப்ரீமியம் உயர்வதற்கு முன்பு காப்பீட்டை எடுப்பதே சிறந்தது.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  




கட்டாயம் வாசிக்க: 


ABP Nadu Exclusive | ‛முதலில் ஹார்மோன் சுரக்கும்... பின்னர் டோபமைன் அதிகம் சுரக்கும்’ ஆன்லைன் விளையாட்டும் ஆபத்தும்! 


SBI | ஸ்மார்ட் வாட்ச் கொடுக்குது SBI பேங்க்.. எஸ்பிஐ அறிமுகம் செய்யும் புது ஆஃபர்!!