Stock Market Update:  இந்திய பங்குச்சந்தை சரிவுடன் முடிவடைந்துள்ளது.


பங்குச்சந்தை நிலவரம்:


மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 16.29 அல்லது 0.025 % புள்ளிகள் சரிந்து 64,942.40 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 5.05%  அல்லது 0.026% சரிந்து 19,406.70 ஆக வர்த்தகமாகியது. நேற்றைய வர்த்தக நேரத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமான பங்குச்சந்தை, இன்று சரிவுடன் நிறைவடைந்துள்ளது. 


தீபாவளி பண்டிகை நேரத்தில் பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமானதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில்  இன்று பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது கவலையை ஏற்படுத்தியுள்ளது. காலை வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 123.79 புள்ளிகள் சரிந்தது. நிஃப்டி 20.80 புள்ளிகள் சரிந்த்து. முதலீட்டாளர்களின் கவனம் அமெரிக்க பங்குச்சந்தை மீது திரும்பியுள்ளதும் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் தொடர்பாக நீடிக்கும் சந்தேகங்களும் இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 


அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து 83.26 ஆக உள்ளது. 


கடந்த சில வாரங்களாகவே இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி நிலையில், இந்த வாரம் பங்குச்சந்தை எப்படியிருக்கும் என கணிக்க முடியாத சூழல் இருக்கிறது. டாடா மோட்டர்ஸ், லார்சன் அண்ட் டர்போ உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்தாண்டு தீபாவளி நேரத்தில் 55-61% பங்குகளின் மதிப்பு உயர்ந்திருந்தது. இந்தஸ்லேண்ட் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு அதிகரித்து இருந்தது. 


லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்


சன் ஃபார்மா, பி.பி.சி.எல்., என்.டி.பி.சி., டாக்டர். ரெட்டிஸ் லேப்ஸ், இந்தஸ்லேண்ட் வங்கி, சிப்ளா, பாரத ஸ்டேட் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பிரிட்டானியா, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, கோடாக மஹிந்திரா, டெக் மஹிந்திரா, டாடா கான்ஸ் ப்ராட்., அல்ட்ராடெக் சிமெண்ட். ஹெச்.சி.எல்., பஜாஜ் ஃபின்சர்வ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, நெஸ்லே, இன்ஃபோசிஸ், ஓ.என்.ஜி.சி. க்ரேசியம் உள்ளிட்ட நிறுவனங்கள்  பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.


நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்


ஹீரோ மோட்டர்கார்ப், பஜாஜ் ஃபினான்ஸ், ஜெ.எஸ்.டபுள்யு., டிவி லேப்ஸ், ரிலையன்ஸ், அப்பல்லோ மருத்துவமனை, கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ், அதானி எண்டர்பிரிசிஸ், லார்சன், பாரதி ஏர்டெல்,ம் பவர்கிரிட் கார்ப், டாடா மோட்டர்ஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.  


ஆசிய, ஐரோப்பிய சந்தைகளில் நிலவும் அசாதாரண நிலை, கச்சா எண்ணெய் விலை சரிவு உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது. 1878 பங்குகள் லாபத்துடன் 1616 பங்குகள் சரிவுடனும் 146 பங்குகள் மாற்றமின்றியும் உள்ளது. நாளைய நிலை எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது. 




மேலும் வாசிக்க..


TN Rain Alert: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வெளுக்கப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?


NEET UG Counselling 2023: தமிழகத்தில் காலி எம்பிபிஎஸ் இடங்கள்: இன்று தொடங்கிய மாநிலக் கலந்தாய்வு- 107 மதிப்பெண்கள் வரை பங்கேற்கலாம்!