அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு நடவடிக்கையால், இந்திய பங்குச் சந்தை சரிவை கண்டுள்ளன. 


இந்நிலையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் மேலும் 69.68 புள்ளிகள் குறைந்து 60,836.41 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 30.15 புள்ளிகள் குறைந்து 18,052 புள்ளிகளாக உள்ளது.






லாபம்- நஷ்டம்:


எஸ்.பி.ஐ., டைட்டான், பாரதி ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ, இந்துஸ்லேண்ட் வங்கி, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


டெக் மகேந்திரா, டாடா மோடார்ஸ், விப்ரோ, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


ஃபெடரல் வங்கி நடவடிக்கை:


அமெரிக்க மத்திய வங்கியின் அலுவல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்துவதாக முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு 4 சதவீதமாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.  


இதன் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள், அமெரிக்க வங்கியில் பணத்தை வைப்பது ஆதாயமாக இருப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தை சற்று சரிவை சந்தித்துள்ளது.


உலகளவில் பணவீக்கம் அதிகரித்தது. இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, அமெரிக்காவின் மத்திய வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலரும் இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து வெளியேறினர்.


இந்நிலையில் மீண்டும் வட்டி விகிதத்தை நேற்று உயர்த்தியது, இந்திய பங்குச் சந்தைகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிக வட்டிவிகிதங்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தை ஒரு மந்தநிலையாக மாற்றக்கூடும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


சரிவில் ரூபாய் மதிப்பு


இந்நிலையில் இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் குறைந்து 82.90 என்ற அளவில் உள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகயிலிருந்து வெளியேறும் காரணத்தால், டாலரின் அள்வு குறையும் சூழல் உருவாகியுள்ளது. 






இச்சூழல் டாலருக்கான பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டாலருக்கான தேவை இருந்தும், பற்றாக்குறை நிலவுவதால், இந்திய ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு குறைய தொடங்கியுள்ளன. இந்நிலையில், இந்திய ரூபாய் மதிப்பை வலுப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி தகுந்த நடவடிக்கையை கூடிய விரைவில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Also Read: Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!